/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் மீலாது தொடர் சொற்பொழிவு
/
அபுதாபியில் மீலாது தொடர் சொற்பொழிவு

அபுதாபி: அபுதாபி மௌலிது கமிட்டி சார்பில் மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, கோடம்பாக்கம், புலியூர் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ். முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் சிறப்புச் சொற்பொழிவு தினமும் நிகழ்த்தி வருகிறார்.
அமீரகம் வருகை புரிந்த அபுதாபி அய்மான் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வினா விடை கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement