sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

பராமரிப்பின் வழி சுதந்திரம் மருத்துவ முகாம்

/

பராமரிப்பின் வழி சுதந்திரம் மருத்துவ முகாம்

பராமரிப்பின் வழி சுதந்திரம் மருத்துவ முகாம்

பராமரிப்பின் வழி சுதந்திரம் மருத்துவ முகாம்


ஆக 28, 2025

Google News

ஆக 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத்தில் தேசபக்தியும் சேவையும் இணைந்த தனித்துவமான நிகழ்வாக, Non-Resident Tamil Indian Association (NRTIA) மற்றும் Saudi Arabia Tamil Nadu Sports Association (SATSA) இணைந்து, Al Maseef Polyclinic மற்றும் Maseef Medical Centre இணைப்பில் மிகப்பெரிய இலவச மருத்துவ முகாமை நடத்தின. இந்திய வம்சாவளியினருக்கும் ரியாத் சமூகத்தினருக்கும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்ட இந்த முயற்சி, “பராமரிப்பின் வழி சுதந்திரம்” என்ற உணர்வை வெளிப்படுத்தியது.


இந்த முகாமை இந்தியத் தூதரகத்தின் ஷாரிக் பத்ர் (Counsellor - Political & Press), பகவான் சாகாய் மீனா (Second Secretary - Labour) தொடங்கி வைத்தனர். சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களை அவர்கள் பாராட்டினர்.


நிகழ்ச்சியில் முகைதீன் சலீம் (இந்திய தூதரக Steering Committee), இம்தியாஸ் (ரியாத் தமிழ் சங்கம்), நூர் முஹம்மது (Indian Welfare Forum), அருண் குமரன் (ரியாத் இந்திய சங்கம்), சையது மரைக்காயர் (Universal Tamil Welfare Association (UTNS) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவ்விருந்தினர்களுக்கு சமூக நலனுக்கும் முன்னேற்றத்திற்குமான பங்களிப்புக்காக NRTIA சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது.


முஸ்தக் முகம்மது அலி, CEO, Al Maseef Polyclinic மற்றும் அவரது மருத்துவ அணி, அப்துல் ரகிம், செயலாளர், SATSA மற்றும் அவரது ஒருங்கிணைப்பு குழு, டாக்டர் சாஜித், செயலாளர், NRI Medical Wing, NRTIA மற்றும் அவரது மருத்துவ அணி ஆகியோர் பாராட்டப்பட்டனர்


இரத்த சர்க்கரை, கொழுப்பு, டிரைகிளிசரைடு பரிசோதனைகள், BMI மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவ ஆலோசனைகள், பல் சிகிச்சை சேவைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.


இந்த முகாமில் 275 க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். மேலும், பங்கேற்பாளர்களுக்கு எதிர்கால மருத்துவ சேவைகளுக்கான 40% தள்ளுபடி அட்டை வழங்கப்பட்டது.


டாக்டர் சந்தோஷ் ப்ரீம் வின்ஃப்ரட், ஒருங்கிணைப்பாளர் (NRTIA) & சட்ட ஆலோசகர், NRT சவூதி அரேபியா, கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். சுகாதார விழிப்புணர்வு, இணைந்து செயல்படுதல் மற்றும் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் முயற்சிகள் இந்திய வம்சாவளி சமூகத்தில் தொடர்ந்து வளர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்த மெகா இலவச மருத்துவ முகாம், சுதந்திர தின விழாவை மட்டுமன்றி “சேவை ” என்ற உயர்ந்த உணர்வையும் பிரதிபலித்து, சமூகத்தில் ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் தேசப்பற்று ஆகிய பிணைப்புகளை வலுப்படுத்தியது.


- நமது செய்தியாளர் M Siraj



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us