/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஆஸ்திரேலியாவில் மேஜர் மாரத்தான் போட்டியில் அமீரக தமிழர்
/
ஆஸ்திரேலியாவில் மேஜர் மாரத்தான் போட்டியில் அமீரக தமிழர்
ஆஸ்திரேலியாவில் மேஜர் மாரத்தான் போட்டியில் அமீரக தமிழர்
ஆஸ்திரேலியாவில் மேஜர் மாரத்தான் போட்டியில் அமீரக தமிழர்
ஆக 23, 2025

துபாய் : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆக., 31ல் நடக்கும் மாரத்தான் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தமிழர் பங்கேற்கிறார்.
துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் செய்யது அலி (வயது 59 ). தமிழ்நாட்டின் குமரிமாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் தொடர்ந்து அமீரக அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் ஓட்டப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்க இருக்கும் மேஜர் மாரத்தானில் பங்கேற்கிறார். சிகாகோ, பெர்லின், லண்டன் மாரத்தானில் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இவர் பங்கேற்கும் 4வது மேஜர் மாரத்தான் ஆகும். வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் மாரத்தான்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
பல நாடுகளில் பலமுறை
அமீரகத்தில் அபுதாபி அட்நாக் நிறுவனம் நடத்திய மாரத்தான் போட்டியில் 3 முறையும், துபாய் மாரத்தான் போட்டியில் 2 முறையும், ராசல் கைமா, புஜேரா, துபாய், அஜ்மான், ஷார்ஜா ஆகிய இடங்களில் நடந்த அரை மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்பெயின் நாட்டின் வாலன்சியா, இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் கொச்சி, கத்தார், ஓமன், அர்மீனியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
அவருக்கு பல்வேறு அமைப்புகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
--நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement