/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் இலவச மருத்துவ முகாம்
/
ரியாத்தில் இலவச மருத்துவ முகாம்

பலரின் தியாகத்தால் அர்ப்பணிப்பால் அடைந்த தேச விடுதலையை அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை வழங்கி கொண்டாடும் முகமாக கடந்த ஆகஸ்ட் 15 ,வெள்ளிக்கிழமை அன்று ரியாத் அல்-அபீர் மருத்துவமனை மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல மருத்துவ அணி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தொடக்க விழா நிகழ்வில் இந்திய தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுவின் தமிழர் பிரதிநிதி ஏர்வாடி முகைதீன் சலீம் தொடங்கி வைக்க அயலகத் தமிழர் நல வாரிய துணை சட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் மற்றும் NRTIA, IWF நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் முன்னிலை வகிக்க தோழமை அமைப்பு பிரதிநிதிகளும் , மருத்துவமனை ஊழியர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு முகாமை முறைப்படி ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் அதிகமான மக்கள் முகாமிற்கு வரத் தொடங்கினார்கள், தொண்டர் அணி சகோதரர்களும் நிகழ்ச்சி பொறுப்புக் குழு நண்பர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருந்த மக்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி அனைவரையும் பதிவு செய்து இரத்த மாதிரிகளை எடுத்து அடுத்தடுத்த பரிசோதனைகளை செய்து இரத்த மாதிரியின் சோதனை முடிவின் அடிப்படையில் முழு உடல் ஆய்வு மற்றும்
கண் மருத்துவர் பல் மருத்துவர் பொது மருத்துவர் உள்ளிட்டோரின் ஆலோசனைகளை பெற்று அனைவரும் பயன் அடைந்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக ஏர்வாடி முகைதீன் சலீம் ,NRTIA DR.சந்தோஷ் மற்றும் தம்பிஸ் உணவாக உரிமையாளர் வசீம், உலகளாவிய தமிழர்கள் நலச்சங்கம் தலைவர் செய்யது மரைக்காயர், தமாம் சமூக சேவகர் சுரேஷ் பாரதி, தமாம் KMCC பொறுப்பாளர் உசேன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை கடந்த ஒரு வாரகாலமாக சிறப்பாக நடத்துவதற்கு பல சகோதரர்கள் இரவு பகல் பாராமல் கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த முகாம் சிறக்க பொருளாதார உதவிய வழங்கிய உள்ளங்கள் இந்த நன்றி கூறியவர்கள் மேலும் ஊடக மூலமாக மக்களுக்கு இந்த செய்தியை எடுத்துச் சென்ற அனைவரது உழைப்பும் இம்முகாம் சிறக்க முக்கிய பங்கு வகித்தது என்று சொன்னால் மிகையில்லை,
அனைத்து மக்களும் பயன் பெற்று தனது உடல் நலன் குறித்து அறிந்து கொண்டு மருத்துவமனையை விட்டு விடைபெற்றுச் சென்றனர் என்பதும் வந்திருந்தவர்களில் ஒரு சிலருக்கு தீவிர சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளது என்பதை கண்டறிந்தது இம் முகாம் நடத்திய நமக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.
இறுதியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் இந்த முகாமை சிறப்பாக நடத்தித் தந்த அல் அபீர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரியாத் மண்டல மருத்துவ அணி சார்பாக நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் களப்பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை ரியாத் மண்டல இந்தியன் வெல்போர் ஃபாரம் சார்பாக தெரிவித்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
- தினமலர் வாசகர், ஆரிப் அப்துல் சலாம்.
Advertisement