/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்
/
அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்
அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்
அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்
மார் 26, 2025

அபுதாபி: அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து இஃப்தார் (நோன்பு துறப்பு) நடந்தது. மஃரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சியின் தொடக்கமாக திருவாவடுதுறை ஜுபைர் கிராஅத் ஓதினார். அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹம்மது அன்சாரி தலைமை தாங்கினார். அமைப்பின் பொதுச் செயலாளர் மதுக்கூர் ஜாபர் ஸாதிக் அனைவரையும் வரவேற்று பேசினார். அமைப்பின் துணைத் தலைவர் பாபநாசம் யஹ்யா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தொடர்ச்சியாக பேசிய அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி அமைப்பின் எதிர்கால திட்டங்களையும் கடந்த கால நினைவுகள், அனுபவங்களையும் விவரித்தார். தொடர்ந்து கலந்து கொண்டவர்களிடமிருந்து வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல அமைப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிரல்களை அமைப்பின் பொதுச் செயலாளர் மதுக்கூர் ஜாபர் ஸாதிக் நெறிபடுத்தினார். நிறைவாக சென்னை மீரான் பைஜி துவாவுடன், அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு, பசுமையான கல்லூரி நினைவுகளோடு கலைந்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement