/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜாவில் ஓட்டப்பந்தயம் ; தமிழக வீரர் முதலிடம் பிடித்து சாதனை
/
ஷார்ஜாவில் ஓட்டப்பந்தயம் ; தமிழக வீரர் முதலிடம் பிடித்து சாதனை
ஷார்ஜாவில் ஓட்டப்பந்தயம் ; தமிழக வீரர் முதலிடம் பிடித்து சாதனை
ஷார்ஜாவில் ஓட்டப்பந்தயம் ; தமிழக வீரர் முதலிடம் பிடித்து சாதனை
ஆக 18, 2025

ஷார்ஜா: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தில் தற்போது வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. இதனால் வணிகவளாகத்தில் ஏசி வசதியுடன் உள்ளரங்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. ஷார்ஜாவின் முக்கிய வணிக வளாகமாக சஹாரா சென்டர் உள்ளது.
இந்த வணிக வளாகத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கான ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி 50 வயதுக்கு
மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று சாதனை படைத்தார்.
அவருக்கு ஷார்ஜா விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
செய்யது அலி தொடர்ந்து சர்வதேச அளவில் மாரத்தான் போட்டிகளிலும், பிற ஓட்டப்போட்டிகளிலும்
பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். அவரது சாதனைகளை அங்கீகரித்து தமிழக அரசு வரும் அயலகத் தமிழர் மாநாட்டில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
-- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement