
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷார்ஜா : ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் சிறப்பு செஸ் போட்டி நடந்தது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷார்ஜா கலாச்சார மற்றும் செஸ் சங்கத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் ஆதரவுடன் சிறப்பு செஸ் போட்டி நடந்தது.
இந்த போட்டியை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஷார்ஜா கலாச்சாரம் மற்றும் செஸ் சங்கம் இத்தகைய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
--- நமது செய்தியாளர், காஹிலா .
Advertisement