/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலய மஹா கும்பாபிஷேக கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலய மஹா கும்பாபிஷேக கோலாகலம்
ஜூன் 10, 2025

170 ஆண்டு வரலாற்றுத் தொன்மை மிக்க சிங்கப்பூர் கேலாங் கிழக்கு ஸ்ரீ சிவன் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஜ+ன் 8 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது..
பக்தர்கள் வெள்ளம் “ ஓம் நமசிவாய...பரமேஸ்வராய ” என விண்ணதிர முழங்க பிள்ளையார் பட்டி தலைமை அர்ச்சகர் டாக்டர் பிச்சை குருக்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.. தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு - அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குடமுழுக்கு விழா நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
வைகறை நான்கு மணிக்கே யாகசாலை பூஜைகள் தொடங்கின. மழையையும் பொருடபடுத்தாமல் மக்கள் வெள்ளம் திரண்டது. பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் மலேசியா - இந்தியா - ஆஸ்திரேலியா சிவாச்சார்யார்களும் குடமுழுக்கை நடத்தினர். தொன்மை மிக்க பக்தி இசைக் கருவிகள் முழங்க கடம் புறப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க சரியாக 8.30 மணிக்குப் பிரதான விமான கலசத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மற்ற விமானங்களுக்கும் குட முழுக்கு நடைபெற்றது.
கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பெருங்கூடாரத்தில் சுமார் 20000 பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.. ஐவண்ணத்தில் ஸ்ரீ சிவன் கோயில் மிளிருகிறது.. இது மூன்றாவது குடமுழுக்காகும்.. பார்வையாளர்கள் சிரமமின்றி கண்டு களிக்க எல்.இடி திரைகள் பொருத்தப்பட்டிருந்தன.. முப்பரிமாண அச்சகத்தைப் பயன்படுத்தி நாரிழையைக் கொண்டு சைவ சமயப புனிதர்களான 63 நாயன்மார்களின் திருவுருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.. 1993 ஆம் ஆண்டில் முதல் குடமுழுக்கு விழாவில் சிற்பப் பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 73 வயது சிற்பக் கலைஞர் நாகராஜன் தலைமையில் 20 சிற்பக் கலைஞ்ர்கள் பங்கேற்றனர்.
நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement