/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் - ஸ்வர்ணாபிஷேக விழா கோலாகலம்
/
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் - ஸ்வர்ணாபிஷேக விழா கோலாகலம்
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் - ஸ்வர்ணாபிஷேக விழா கோலாகலம்
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் - ஸ்வர்ணாபிஷேக விழா கோலாகலம்
ஜூலை 10, 2025

சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஜூலை ஐந்தாம் தேதி ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் - ஸ்வர்ணாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ விஸ்வக்சேனா, சங்கல்பம் நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவில் பிரதான கடம் மங்கல வாத்யம் முழங்க ஆலயம் வலம் வந்து திருமஞ்சணம் கோலாகலமாக நடைபெற்றது. மாலையில் 18 சுமங்கலி மகளிர் பாராயணம் செய்து, சீர் வரிசை எடுத்து வந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஸ்வர்ணாபிஷேகம் ( தங்கக் காசு ) நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் “ கோவிந்தா...நாராயணா.. வைகுந்த வாசா என விண்ணதிர முழங்கியமை மெய்சிலிர்க்க வைத்தது. ஸ்வர்ணாபிஷேகப் பொற் காசுகள் பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அண்மையில் மணி விழாக் கண்ட தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் சகலவித சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் பெற்று இன்னும் முத்து விழா பவள விழா வைர விழா நூற்றாண்டு விழாக் கொண்டாடி நிறை வாழ்வு வாழ அரங்கம்நிறை பக்தப் பெருமக்கள் வாழ்த்தியமை நன்றியுணர்வின் பிரதிபலிப்பாக காட்சியளித்தது. நிறைவாகப் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement