
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடைசி வரை மனிதனுடன் வருவது எது என அறிஞர் ஒருவரிடம் கேட்டான் ஸ்டீபன். மூன்றின் மீது பிரியமாகவும், ஒன்றின் மீது அக்கறை இல்லாமலும் வாழ்கிறான். ஆனால் அந்த ஒன்று மட்டும் கடைசி வரை கூட வரும் என்றார் அவர்.
'விடை கேட்டால் நீங்கள் புதிர் போடுகிறீர்களே...' என்றான் ஸ்டீபன்.
'உடல், சொத்து, உறவுகள் ஆகிய மூன்றின் மீது பிரியமாக இருப்பான். ஆனால் இறந்த பிறகு அந்த மூன்றும் கூட வராது. அவன் செய்த நன்மை, தீமைகளைச் சுமந்தபடி ஆத்மா வரும்' என்றார் அறிஞர்.
'வாழும் காலத்தில் ஆத்மா நலிந்து போனாலும் இறுதி வரை வருவது அது' என்கிறது பைபிள்.