நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரண்மனை தலைமை கணக்கராக பணியாற்றிய டேனியல் மீது பொறாமை கொண்டு சிலர் மன்னரிடம் புகார் செய்தனர். அவரோ ஆண்டவர் மீது விசுவாசியாக இருப்பவர். குற்றவாளி எனக் கருதிய மன்னரும் அவரை சிங்கத்துடன் ஒருநாள் முழுவதும் குகையில் அடைத்திட உத்தரவிட்டார். நேர்மை தவறாத அவர் துணிச்சலுடன் தண்டனையை ஏற்றார். மறுநாள் சிரித்த முகத்துடன் டேனியல் வந்தார். அவரின் நேர்மையே அவரைக் காப்பாற்றியது என உணர்ந்தார் மன்னர்.