நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறியவர்களைக் கண்டதும் 'வாழ்க வளர்க' என பெரியவர்கள் வாழ்த்துவர். இது உயர்ந்த பண்பு. இதற்கு உவமையாக வாழை மரத்தைச் சொல்வார்கள்.
விதையே இல்லாத மரம் வாழை. முதிர்ந்தாலும் அதன் கிழங்கில் இருந்து கன்று முளைக்கும். இதன் பூ, இலை, காய், பழம், கிழங்கு, நார், தண்டு என அனைத்தும் பயன் தரும். வாழை போல சமுதாயத்திற்கு பயனுள்ள மனிதராக வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.