
மார்ச் 24 பங்குனி 10: சங்கரன்கோவில் கோமதியம்பாள் தங்கபாவாடை தரிசனம். காந்திமதியம்மன் நெல்லையப்பருக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
மார்ச் 25 பங்குனி 11: சதுர்த்தி விரதம். கார்த்திகை விரதம். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேக ஆராதனை. மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.
மார்ச் 26 பங்குனி 12: மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் காலை ராஜாங்க சேவை. இரவு சிம்ம வாகனம். மன்னார்குடி ராஜ கோபால சுவாமி காலை வெண்ணெய் தாழி சேவை, இரவு தங்கக்குதிரையில் ராஜாங்க அலங்காரம்.
மார்ச் 27 பங்குனி 13: முகூர்த்த நாள். நேசநாயனார் குருபூஜை. கழுகுமலை சுப்பிரமணியர், திருச்சுழி திருமேனிநாதர், கங்கைகொண்டான் ஸ்ரீவைகுண்டபதி, திருச்சிராப்பள்ளி தாயுமானவர், திருவாதவூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர், திருபுவனம் சிவபெருமான், சென்னை மல்லீஸ்வரர், சென்னை வடபழநி ஆண்டவர் இத்தலங்களில் உற்ஸவம் ஆரம்பம்.
மார்ச் 28 பங்குனி 14: திருப்பரங்குன்றம் முருகன் தங்ககுதிரையில் புறப்பாடு. பரமக்குடி முத்தாலம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகநாதப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.
மார்ச் 29 பங்குனி 15: மாதாந்திர திருவாதிரை நாள். ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப்பெருமாள், தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம். கணநாதர் குருபூஜை. கரிநாள்.
மார்ச் 30 பங்குனி 16: ஸ்ரீராமநவமி. சகல பெருமாள் கோயில்களிலும் உள்ள ராமர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பழநி முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.

