sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1077

அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ரியாக்ஷன் |Allu Arjun|CM Revanth Reddy

வீடியோ: பொது

13-Dec-2024

மேஷம்; அசுவினி.. நினைத்ததை சாதிக்கும் வலிமையுடைய உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். கடந்த கால நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சரணடையும் நிலை உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். ராசி அதிபதி வக்ரம் அடைந்திருப்பதால் உங்களுக்கு  இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். லாப ஸ்தான சனி பகவான் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். வரவுகளை அதிகரிப்பார். தொழிலில் இருந்த தடை நீங்கும். புதிய தொழில், வேலை வாய்ப்பிற்கு முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட கடன் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உறவுகளின் உண்மை அன்பு வெளிப்படும்.சந்திராஷ்டமம்: டிச. 27, 28.அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 18, 25. ஜன. 7, 9.பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.பரணி; செயல்களில் துணிவு கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும்.  நெருக்கடியின் காரணமாக மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்திடக்கூடிய நிலை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் உயரும். புதிய பொருள் சேரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ வேண்டுதல்கள் நிறைவேறி குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சிலர் வேலையில் இருந்து விலகி சொந்தமாக தொழில் தொடங்குவீர். கலைஞர்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தெளிவாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனையால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 28, 29.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 1ம் பாதம்:  முதன்மையாக இருக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். முன்பு ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனக்குழப்பம் நீங்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய வலிமை உண்டாகும். பிறரிடத்திலும், உடன் பணிபுரிபவர்கள் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர். மற்றவருக்கு உதவி செய்வதில் முதன்மையாக இருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். நினைத்த வேலை நடக்கும். செய்து வரும் தொழிலில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்கள் கனவு நனவாகும். கடன் தொல்லை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய வீடு, சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 29.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 19, 27, 28. ஜன. 1, 9, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்ய சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரித்து வருவதால் செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை தேவை. அரசு ஊழியர்களின் செயல்பாட்டிற்கேற்ப பலன் உண்டு. எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மெமோவும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் வேலையில் கவனமாக இருப்பதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். சனி பகவானின் பார்வை உண்டாவதால் செலவு அதிகரிக்கும். நண்பர்களுடன் மனஸ்தாபம், வாழ்க்கைத் துணையிடம் பிரச்னை ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். சூரியனால் அரசு வழி முயற்சியில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவீர்கள். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவிற்கு குறைவிருக்காது. நினைத்த வேலைகளை நடத்தி காண்பீர்கள். புதனால் புதிய முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச. 30.அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 6, 10.பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.ரோகிணி: வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் அலைச்சல் குறையும். சனி பகவான், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு முன் அது பற்றி நன்றாக தெரிந்து கொண்டு முடிவிற்கு வரவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. ராகுவினால் எதிர்பார்த்த வரவு வரும், அதே நேரத்தில் செலவுகளும் ஏதாகிலும் ஒரு வகையில் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வேலையின் காரணமாக அலைச்சல் கூடும். வெளியூர் பயணம் ஏற்படும், வேலையின் நிலை இருக்கும். உங்களைப் புரிந்து கொள்ள முடியாத காலமாக இந்த மாதம் இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியினை டிச. 30 வரை சுக்ரனும், ஜன. 1 முதல் புதனும் உங்களுக்கு வழங்குவர். நெருக்கடி வந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் போகும். எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் மட்டும் கவனமாக செயல்படுவது அவசியம். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை எழுந்தாலும் அதனைத் தள்ளி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், நண்பர்களுடனும், உடன் பணிபுரிபவர்களுடனும் விட்டுக் கொடுத்துச் செயல்படுவதும் நன்மையை உண்டாக்கும். ஆசிரியர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 31.அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 24, 29. ஜன. 2, 6, 11.பரிகாரம்:  சங்கர நாராயணரை வழிபட்டால் வெற்றி உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். குரு, செவ்வாய், சூரியன், சனி சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் வருமானத்திற்கு வழிகாட்டுவார். வெளிநாட்டு தொடர்புகளில் லாபத்தை உண்டாக்குவார். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கூடும். பங்கு மார்க்கெட்டில் வருமானம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்புகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பதும், சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் நல்லது. பணியாளர்கள் மேலதிகாரிகள், முதலாளிகள் வழிகாட்டுதல்படி செயல்படுவதால் சங்கடம் ஏற்படாமல் போகும். முடிந்தவரை உடன் பணிபுரிபவர்கள், வாழ்க்கைத்துணை, நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக கவனம் செலுத்துவதும், பூர்வீக சொத்து விவகாரத்தில் விட்டுக்கொடுத்து செயல்படுவதும் நல்லது.  சுக்ரனும், புதபகவானும் வழிகாட்டுவார்கள். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச. 31, ஜன. 1.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம் .. நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். சனி பகவான் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவார். இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றமடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். எதிர்ப்பு இல்லாத நிலை இப்போது உருவாகும். இழுபறியாக இருந்த வழக்குகள், பிரச்னை எல்லாவற்றிலும் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் ஜனவரி 1 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த ஒப்பந்தங்கள் இப்போது கைக்கு வரும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் வேகம் கூடும். வெளி நாட்டு தொடர்பு லாபம் தரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 1.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.திருவாதிரை: எதிலும் துணிச்சலாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் தொழில், வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிப்பார். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த வரவு வரும். சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பாக்யாதிபதி சனிபகவான் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனம் தெளிவடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவேண்டிய பணம், சொத்து கைக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பெரிய மனிதர்கள் சந்திப்பு உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.  ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலமும் உண்டாகும். நீங்கள் எடுக்கின்ற முயற்சி இப்போது லாபமாகும். உழைப்பு அதிகரித்து அதன் காரணமாக சோர்வு ஏற்படும் என்றாலும் வருமானத்தின் காரணமாக அவை உங்களுக்குத் தெரியாமல் போகும். நீங்கள் நினைத்திருந்த வேலை ஒவ்வொன்றாக நடந்தேறும். பணியில் இருப்பவர்களுக்கு இது யோகமான மாதம். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்:  ஜன. 2 .அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 23, 31. ஜன. 4, 5, 13.பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் நீங்கும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குருபகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செலவுகள் மட்டுப்படும். இருந்தாலும், அனைத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஜன. 1 வரை உங்கள் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இதுவரையில் இருந்த நெருக்கடி நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் யோகமான பலன்களை வழங்குவார். அவருடைய மூன்று பார்வைகளும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை பலவித முயற்சிகள் மேற்கொண்டும் நிறைவேறாமல் இருந்த வேலை இப்போது நடந்தேறும். வாழ்க்கைக்குரிய அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியும், தொடங்க நினைத்தவர்களின் முயற்சியும் வெற்றியாகும். செய்துவரும் தொழில் விருத்தியாகும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். சிறிய வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் கனவு நனவாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரைகள் படிப்பில் ஆர்வத்தை உண்டாக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 3.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 5, 12.பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி வழிபட நன்மை உண்டாகும்.

கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். நீங்கள் எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ராசிக்குள் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முன்னேற்றத்திற்குரிய யோக பலன்களை தொடர்ந்து வழங்குவார். உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் கிடைக்கும். புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து சேரும். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய சக்தி உண்டாகும். சாதுர்யமாக செயல்பட்டு திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். அதன்பிறகு தெளிவு பிறக்கும். உங்கள் பணியில் கவனமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படத் தொடங்குவீர். இந்த நேரத்தில், அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு கவுரவத்திலும் குறைவு ஏற்படலாம்.  அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படவும் வாய்ப்புண்டு. உடல்நிலை, செல்வாக்கு ஆகிய இரண்டு நிலைகளிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு உண்டான வம்பு வழக்கு முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 3.அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 21, 29, 30. ஜன. 2, 11, 12.பரிகாரம்: திருக்குவளை பிரம்மபுரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.பூசம்: நீதி நேர்மை நியாயம் என வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். சனி பகவானால் உடல் ரீதியாகவும், மன  ரீதியாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கக்கூடிய சக்தியினை வழங்குவார். சூரியன் சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். நோய் நொடிகள் குணமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி நீங்கும் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வம்பு வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சிகளில் லாபம் ஏற்படும். தொழில் தொடங்க, வீடு கட்ட எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புத பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். தடைபட்டிருந்த வேலைகளை சாமர்த்தியமாக நடத்தி முடிப்பீர்கள். சுக்ரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். உங்கள்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 3, 4. அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11.பரிகாரம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரரை வழிபட வளம் உண்டாகும்.ஆயில்யம்;  திறமையாக செயல்பட்டு, நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் நினைத்த வேலை ஒவ்வொன்றாக நடக்கும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும். புதன் யோகப் பலன்களை வழங்குவார். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர்களால் உதவி உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செயல்களை வெற்றியாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை வாய்ப்பிற்கு காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி குறையும். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை ஆதரவு கூடும். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் பிறரை நம்பாமல் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். தெய்வ அனுகூலமும், பெரியோரின் உதவியும் இந்த நேரத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 4, 5.அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன, 2, 11.பரிகாரம்: பரிக்கல் நரசிம்மரை வழிபட சங்கடம் நீங்கும்.

சிம்மம்; மகம்.. சூழ்நிலையை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் சனிபகவான், அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன குடும்ப ஸ்தானத்தில் கேது என்ற சஞ்சார நிலை நெருக்கடிகளை அதிகரிக்கும். திறமையின் காரணமாக எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் இந்த நேரத்தில் அவசியம். புதியவர்களை நம்பி எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். அதனால் நெருக்கடியே ஏற்படும். உடல் நிலையில் எப்போதும் கவனமாக தேவை. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை ஏற்படும். அதைத் தள்ளி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். ஜன. 1 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். செய்துவரும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பதும், உத்யோகம் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. வீண் பிரச்னை இக்காலத்தில் உங்களைத் தேடிவரும். அவசர முடிவுகள், ஆவேச செயல்பாடுகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் நெருக்கடி விலகும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 5, 6.அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 19, 25, 28. ஜன. 1, 7, 10.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் நீங்கும்.பூரம்; சொந்த வேலையில் கவனமாக இருந்து வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். புதிய முயற்சிகளை விட, வழக்கமான வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கடிகள் இல்லாமல் போகும். உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரனின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை. கிரகங்களின் சஞ்சார நிலைகளும் எதிர்மறையாக இருப்பதால் இந்த மாதம் ஒவ்வொன்றிலும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்படுவதும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தடாலடி வேலைகள் எதுவும் இந்த மாதத்தில் வேண்டாம். சூரியனும், சனியும், ராகுவும் உடல் நிலையில் ஏதேனும் பிரச்னைகளை உண்டாக்கலாம், பரம்பரை நோய்களை வெளிப்படுத்தலாம். உடல்நலனில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. வரவு செலவிலும் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதால் சங்கடம் இல்லாமல் போகும். கடன் வாங்குவது கொடுப்பது போன்றவற்றையும் இந்த மாதத்தில் தள்ளி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  உங்கள் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியினை புத பகவான் வழங்குவார். அதன்பிறகு உங்கள் செயல்பாடுகளை ஒரு கட்டுக்குள் நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 6, 7.அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 10.பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம்: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் நற்பலன்கள் கூடுதலாகும். மாதம் முழுவதும் சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் குழப்பம் இருந்து கொண்டிருக்கும். தெளிவாக செயல்பட முடியாத அளவிற்கு உங்கள் சூழ்நிலையும் உடல்நிலையும் அமையும். கேதுவும், சனி பகவானும், ராகுவும் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரனின் சஞ்சாரமும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிர்பாலினர் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து அதன் பிறகு முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் அவசியம். உடன் பணி புரிபவர்களையும், பிறரையும் அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். யாரிடமும் கோபத்தையோ பிரச்னைகளையோ இந்த நேரத்தில் கொண்டு செல்ல வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையாகும். பிள்ளைகள் மீது அக்கறை கொள்வதும், அவர்களை உங்கள் கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்வதும் நல்லது. மாணவர்கள் ஆசிரியர்கள் அறிவுரைகளை இப்போதிருந்தே பின்பற்றுவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 7. அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 28. ஜன. 1, 10.பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.

கன்னி; உத்திரம் 2, 3, 4 ம் பாதம்.. வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். டிச. 30 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஜன. 1 முதல் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேர்க்கை இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர். இருந்தாலும், புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். தவறான வழிகாட்டுதலை யார் வழங்கினாலும் அவர்களை விட்டு விலகுவது உங்களுக்கு நன்மையாகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 7, 8.அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 23, 28. ஜன. 1, 5, 10.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.அஸ்தம்; தெளிவாக செயல்பட்டு திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். 6 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வியாபாரம், தொழிலில் தோன்றிய போட்டி விலகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகி இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவார்கள். ஜன. 1 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். உறவுகளின் ஆதரவு கூடும். நீண்ட நாட்களாக வாங்க முயற்சித்து வந்த இடத்தை வாங்கக்கூடிய நிலை உண்டாகும். இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதுடன், புதிதாக வருபவர்களிடம் அதிகபட்ச எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் அதன் காரணமாக இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்கள் விரயாதிபதி சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 8, 9.அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன. 2, 5, 11.பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்; துணிச்சலும் தைரியமும் இருந்தாலும் எதிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரம் அடைந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் திறமையை அதிகரிப்பார். தேவைகளைப் பூர்த்தி செய்வார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். எதிர்ப்பு காணாமல் போகும். உங்களை எதிர்த்து செயல் பட்டவர்கள் உங்களிடமே வந்து சேரக்கூடிய நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த விவகாரம், பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும். தடைபட்ட வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பர். ஒரு பக்கம் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் அதனால் ஆதாயமும் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து புதிய பொருட்கள் வாங்குவீர். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருவாய் அதிகரிக்கும்.  புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஒவ்வொரு வேலைகளையும் நடத்தி அதில் லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணி புரியும் இடத்தில்  செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜன. 9.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5.பரிகாரம்: வடிவேலனை வழிபட வாழ்வில் வளம் காண்பீர்கள்.

துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்.. துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்தாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் வேலைகளில் லாபத்தை ஏற்படுத்துவார். தடைபட்டிருந்த முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழியில் எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்துவார்.  வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு கனவை நனவாக்குவார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். ராசிநாதன் சுக்ரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருக்கும். குடும்பம், வியாபாரம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பிரச்னை  விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பர். எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கிற அளவிற்கு உங்களுடைய நிலை மாற்றம் அடையும். ஜன. 1 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு, புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்:ஜன. 9, 10.அதிர்ஷ்ட நாள்:டிச. 18, 24, 27. ஜன. 6.பரிகாரம்: கைலாச நாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சுவாதி:  எது வழி சரியோ அந்த வழியில் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். யோகக்காரகன் ராகு நினைத்ததை சாதித்திடும் நிலையை இப்போது உண்டாக்குவர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் இதுநாள் வரை பிறரால் கண்டும் காணாமல் இருந்த உங்கள் நிலையில் இப்போது மாற்றம் வரும். உடல்நிலையிலும், மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்படத் தொடங்குவீர். எங்கு போனாலும் தடை, நெருக்கடி என்றிருந்த நிலை இப்போது மாறும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வர். அதனால்  நினைத்த வேலைகளைத் தடையின்றி நடத்திக் கொள்ளமுடியும். இழுபறியாக இருந்த வழக்கிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்புவரும். முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். எந்த அளவிற்கு உங்களுடைய முயற்சிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு  வெற்றியுண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு இப்போதே திட்டங்கள் தீட்டலாம். வேலைக்காக முயற்சித்து வருபவர்கள் அதற்குரிய வேலைகளில் தீவிரம் காட்டலாம். எந்த ஒன்று உங்களுக்கு இதுவரை தடையாக இருந்ததோ அவை இப்போது விலகும். செயல்களில் இருந்த சிரமம் விலகும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.சந்திராஷ்டமம்: ஜன. 10, 11.அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 24, 31. ஜன. 4, 6, 13.பரிகாரம்: பிரத்யங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்; ஒவ்வொன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் ராசி நாதன் சுக்ரன் மாதம் முழுவதும் யோகப் பலன்களை வழங்கிட இருக்கிறார். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் எடுக்கும் வேலை எல்லாம் வெற்றியாகும். யோகக்காரகன் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்:ஜன. 11.அதிர்ஷ்ட நாள்:டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்; விசாகம் 4 ம் பாதம்.. செயல் திறன் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நினைப்பதை நடக்கும் மாதம்.  குரு, செவ்வாய், கேது பகவான் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். வரவுகளை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். நியாயமான செயல்களில் லாபத்தை உண்டாக்குவார். வெளிநாட்டு முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்துவார். பெரியோரால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் கோயில்களில் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருவீர்கள். பிள்ளைகள் பற்றி மனதில் ஒரு கவலை ஓடிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்கள்.  எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் வெளியில் வரமுடியும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்புகளையும் போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். பொன் பொருள் சேரும். இந்த நேரத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜன. 11.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 21, 27, 30. ஜன. 3, 9, 12.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அனுசம்; நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. உடல் ரீதியாக சில சங்கடம் தோன்றினாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் தடையின்றி வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் லாபம் உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புத பகவான் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை லாபமாக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைப்பார். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தவர்கள் கனவை நனவாக்குவார். புதிய தொழில் தொடங்குவதற்காக திட்டங்கள் தீட்ட வைப்பார். எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றிலிருந்து இக்காலத்தில் உங்களால் விடுபட முடியும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: டிச. 16. ஜன. 12.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9.பரிகாரம்: விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.கேட்டை; விவேகத்துடன் செயல்பட்டு எந்த ஒன்றிலும் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கேட்டிருந்த இடத்திலிருந்து கடன், தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த வரவு இருக்கும். சிறு வியாபாரத்திலும் லாபம் கூடும். உழைப்பாளர் நிலை உயரும். சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வழியில் லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நிதி நிறுவனம் நடத்தி வருபவர்கள் நிலை உயரும். வசூலாகாமல் இருந்த பணம் வரும். வெளிநாட்டு முயற்சிகள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம் தரும். அதே நேரத்தில், உழைப்பும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலை பளு கூடும். பணியின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் நிதானமாக செயல்படுவதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 17. ஜன. 13.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9.பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.

தனுசு; மூலம்.. வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். நெருக்கடிகளை நீக்குவார். வெளிநாட்டு தொடர்புகளை அதிகரிப்பார். நீண்ட நாட்களாக வேலைக்கு முயற்சித்தவர்களின் கனவை நனவாக்குவார். அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய வேலைகளை இக்காலத்தில் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். ஜன. 1 முதல் புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களுடைய திறமை வெளிப்படும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். புதிய நண்பர்கள் வழியே ஒரு சில அனுபவங்களையும் அடைய வேண்டியதாக இருக்கும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி விலகும். எடுக்கின்ற முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதித்திடக்கூடிய சக்தி உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் பொழுது போக்கிற்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 17, 18.அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 25, 30. ஜன. 3, 7, 12.பரிகாரம்: விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட சங்கடம் நீங்கும்.பூராடம் ; எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் விருப்பம் பூர்த்தியாகும் மாதம். அதிர்ஷ்டக் காரகனும் உங்கள் நட்சத்திராதிபதியுமான சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் விருத்தியாகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். பணியாளர்கள் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடக்கூடிய வாய்ப்புகளை வழங்குவார். பத்தாமிடத்து கேது வெளிநாட்டு முயற்சிகளில் ஆதாயத்தை உண்டாக்குவார். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர்களின் கனவை நனவாக்குவார். உறவினர் ஆதரவு கூடும். ஜன. 1 முதல் புத்திக்காரகன் புதனால் உங்கள் திறமை வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும், புகழும்,  கிடைக்கும். 4 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: டிச. 18, 19.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்; லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிலும் வேகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். முயற்சி ஸ்தான சனி பகவானும், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும், புத்திக்காரகன் புதனும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையுடன் ஒரு சிலருக்கு புதிய சொத்தும் சேரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம், பங்கு மார்க்கெட்டில் புதிய முதலீடு செய்வீர். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்னை, வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சிகளை மேற்கொள்வீர். உழைப்பாளர்கள் நிலை உயரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 19.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 28, 30. ஜன. 1, 3, 10, 12.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.

மகரம்; உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்.. தர்ம சிந்தனையாலும் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் மாதம். சூரியன் 12 ல் சஞ்சரிப்பதால் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். இதுவரையில் கிடைத்த வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடத்தில் கவனமாகவும் சட்ட சிக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். புதபகவான் ஜன 1 முதல் நன்மையான பலன்களை வழங்கிட இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டிருந்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். நண்பர் உறவினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சனி பகவான் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நல்லது. இந்த மாதத்தில் லாபத்தை நோக்கி உழைப்பும் அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் சோர்வடையும் ஒரு சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு வழக்கத்தை விட இந்த மாதம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 20.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 19, 26, 28. ஜன. 1, 8, 10.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.திருவோணம்;  முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம்.  வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பதும், வரவிற்கேற்ற செலவை மேற்கொள்வதும் பாதுகாப்பை உண்டாக்கும். ராகு உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார். எதிர்பார்த்த உதவிகளை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்க வைப்பார். தைரியமும் துணிச்சலுமாக செயல்படத் தொடங்குவீர். எதிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. மாதம் முழுவதும்  சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வரவு வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாலினரால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஏற்படும். சனி பகவானின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாவதால் உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போதும், இயந்திரப்பணியில் ஈடுபடும்போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும், தெய்வ அனுகூலமும் கூடும். மாணவர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 21.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11.பரிகாரம்: கபாலீசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்; விவேகத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். உங்களுக்கு லாபாதிபதியும், நட்சத்திர அதிபதியுமான செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருந்தாலும், மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு எதிர்பார்த்த முன்னேற்றங்களை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார். லாபத்தை அதிகரிப்பார். உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் சங்கடம் நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ஞான மோட்சக் காரகனால் ஆன்மிகப் பயணம் செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு வருவீர்.  சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலகும். பிறர் மதித்திடக் கூடிய அளவிற்கு உங்களுடைய நிலை மாறும். உழைப்பாளர்கள் நிலை உயரும். உடல்நிலையில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. புத பகவானின் சஞ்சாரத்தால் புதிய சொத்து சேர்க்கை, எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: டிச. 22.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன் 8, 9.பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்; அவிட்டம் 3, 4 ம் பாதம்..  உறுதியும் செயலில் வேகமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். தடைபட்ட வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முதலீட்டில் லாபம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி அடையும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனிபகவான் நிலையை உயர்த்துவார், தைரியமாக செயல்பட வைப்பார்.  நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்து செல்வது நல்லது. செய்து வரும் தொழிலில் வழக்கத்தை விட கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அதனால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வையும், செயல்பாடும் அவசியம். அதிர்ஷ்டக் காரகன் சுக்ரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச. 23.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9.பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.சதயம்; பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ராகு பகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் வரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்கள் வார்த்தைகளில் கவனம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. சூரியன் சந்திப்பதால் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இந்த மாதத்தில் வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். புத பகவான் அருளால் இடம் வாங்குவது விற்பது போன்ற வேலைகள் எளிதாகும். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமான நிலை ஏற்படும். சுக்ர பகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும், பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும். சப்தம ஸ்தானத்தை ஜென்ம சனி பார்ப்பதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், அவரின் உடல் நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வதும், நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதும் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் தரும். வழக்கத்தை விட படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச. 23.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 22, 26, 31. ஜன. 4, 8, 13.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்; எந்த ஒன்றிலும் உறுதியுடன் செயல்பட்டு லாபம் அடைவதுடன், பிறர் நலனிலும் அக்கறை கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைத்திலும் பின் விளைவு பற்றி யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. சூரியனும், புத பகவானும்,  சுக்ரனும் யோகப் பலன்களை வழங்கிட இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். இதுவரையில் தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக இப்போது நடைபெற ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். எல்லா வகையிலும் நன்மைகளை காணக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உழைப்பாளர்கள் நிலை முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இணக்கமான நிலை ஏற்படும். சனி பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் அக்கறை செலுத்தி வருவது இக்காலத்தில் மிகவும் அவசியம். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் விட்டுக் கொடுத்து செயல்படுவதன் வழியாக லாபம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 24.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 26, 30. ஜன. 3, 8, 12.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மீனம்; பூரட்டாதி 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் ஒவ்வொன்றிலும் நிதானம் அவசியம். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். அதே நேரத்தில் ஜீவன ஸ்தானத்தில் ஆத்ம காரகனான சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விரய சனியால் செலவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, வரவு செலவுகளில் எப்பொழுதும் கவனம் வேண்டும். கடன் கேட்பவர்களை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நண்பர்களில் ஒரு சிலர் இக்காலத்தில் உங்களுக்கு தவறான வழிகாட்டலாம். அதனால் நீங்கள் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுப்பது நல்லது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 25.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 30. ஜன. 3, 12.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி; குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல், நினைப்பதை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் செலவுகளை பல வழியிலும் ஏற்படுத்துவார். வரவை விட செலவு அதிகரிக்கும். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பதிவதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். இக்காலத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையாகும். பாக்ய ஸ்தானத்திற்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர். பெரிய மனிதர்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைத்து நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் இருந்த தடைகள், குழப்பங்கள், பிரச்னை விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகவல் வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஜன. 1 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் நிலை முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். தொழிலாளர்கள் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். மாணவர்கள் கேளிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 26.அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 30, ஜன. 3, 8, 12.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை ஏற்படும்.ரேவதி; புத்திசாலித்தனமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். புத பகவான் ஜன. 1 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். இந்த நேரத்தில் சுக்ரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். சனி பகவான் வரவை விட செலவை அதிகரிப்பார். குடும்ப ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதும், சப்தம ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதும் குடும்பத்தில் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தும். பிரச்னைகள் உருவாகும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய நண்பர்களை விட்டு விலகுவதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் பிரச்னைகளுக்கு இடம் கொடுக்காமல் போகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். அதன் காரணமாக சில தவறான நபர்களின் வழிகாட்டுதலை ஏற்க வேண்டியதாக இருக்கும். அதனால், உங்களுக்கு சங்கடங்களும் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செயல்களில் வெற்றியை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். தடைப்பட்ட வேலை நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக திட்டங்கள் தீட்டுவீர்கள். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும் அதற்குரிய வாய்ப்பும் வரும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பின் மீது முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 27.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 12.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar