குருபெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் : கடகம்
19 அக் 2019 to 30 அக் 2020
முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

கடகம்குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என சொல்ல முடியாது. 5ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மையை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் பிற்போக்கான நிலை ஏற்படாது. உண்மையும், உழைப்பும் உங்களை உயர்த்தும். பொதுவாக 6ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9ம் இடத்து பார்வை சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.
குருபகவானால் குடும்பத்தில் குழப்பம், பிரச்னை வரலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். இருப்பினும் குருவின் 9ம் இடத்துப் பார்வையால் மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது.
அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டு. கார் போன்ற வாகனங்களும் வாங்கலாம். 2020 ஆக.31 முதல் ராகுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.
தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு வீண்விரயம் ஏற்படலாம். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. இருப்பினும் சனிபகவான் பலத்தால் பொருளாதாரம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தலாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு உயரும்.
அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் சுயதொழில் தொடங்கலாம். சனிபகவானால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். 2020 ஆக.31 முதல் வியாபாரிகளுக்கு விரயம் மறையும். வெளியூர் பயணம் அனுகூலம் தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் ஆதாயம் தரும். தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் நல்ல வருமானம் காண்பர்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் திடீர் பணி, இடமாற்றத்தைச் சந்திக்கலாம். ஆரம்பத்தில் இடமாற்றத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் நாளடைவில் சாதகமாக மாறும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.
சிலருக்கு புதிய பதவியும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பின் தங்கிய நிலை மறையும். சம்பள உயர்வு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகஊழியர்கள் உறுதுணையாக இருப்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்கள் புகழுடன் திகழ்வர். சிலருக்கு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். 2020 ஆக.31 முதல் அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அலைச்சலால் சிரமப்படுவர்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். இருப்பினும் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கல்வியில் வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கல்விக்கடனுடன் கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த வருமானம் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் தனி அந்தஸ்துடன் இருப்பர். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.
பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை
* பவுர்ணமியன்று அம்மன் சன்னதியில் நெய் விளக்கு