Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
14 நவ 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

கும்பம்

அவிட்டம் 3, 4 ம் பாதம்; உழைப்பால் முன்னேறும்  உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதத்தில் புதிய பாதை தெரியும் ஜென்ம ராசிக்குள் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும்  அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படுவது நல்லது. தன, குடும்ப, வாக்கு இடத்தில் ராகு,  8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள்  தேவையற்ற குழப்பம் உருவாகும். பணவரவில் தடை ஏற்படும். உடல் நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். எதிரிகள் கை மேலோங்கும். பெண்கள் தங்கள் நலனையும், கணவரின் நலனையும் கவனமாக பார்த்துக் கொள்ளுதல் அவசியம். செவ்வாய் சஞ்சரித்தினால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து உங்களால் விடுபட முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். உடலில் இருந்த சங்கடம் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சூரியனால் அரசு பணியில் இருப்போர் முன்னேற்றம் அடைவர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சுக்ரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும், பொன் பொருள் சேரும். மாதத்தின் பிற்பகுதியில் புதனின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 25.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.
பரிகாரம்:  நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.

சதயம் ; சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் எதிர்பார்ப்பு நிறைவேறும் மாதம். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் செயல்களில்  தடைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டாலும், ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சூரிய பகவானால்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.  உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சொத்து விவகாரத்தில் இருந்த சிக்கல்கள், வழக்குகள் சாதகமாகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இடம் விற்பது வாங்குவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இருப்போர் முன்னேற்றமான நிலையை அடைவீர்கள். சனி பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.  2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் பண வரவு அதிகரித்தாலும், மறுபக்கம் ஏதேனும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  கேதுவினால் மறைமுகத் தொல்லை இருக்கும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.  மாதத்தின் பிற்பகுதியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் புதிய இடம் வாங்கும். முயற்சி, கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் கிடைத்தல், புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தல் என்று முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். மாதம் முழுதும் சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 25, 26.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 22, டிச. 4, 8, 13.
பரிகாரம்: சனீஸ்வரரை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.

அவிட்டம் 1, 2, 3 ம் பாதம்; நீதி நேர்மையுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில், சூரிய பகவான் மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை வழங்க இருக்கிறார். செய்து வரும் தொழில், பார்த்து வரும் உத்யோகம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். அரசு வழி விவகாரம் சாதகமாகும். பணிபுரியும் இடத்திலிருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். செவ்வாய் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இதுவரை இருந்த எதிர்ப்பு இல்லாமல் போகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார். வழக்கு சாதகமாகும். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புத பகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்படுவது நல்லது. வயிறு, மார்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஒரு சிலருக்கு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும். குடும்பத்திலும் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக சதிகள் செய்வார்கள் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பெண்கள் தங்களது கவன் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 26, 27.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 21, 30. டிச. 3, 8, 12.
பரிகாரம்: அனுமனை வழிபட நன்மை அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap