Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
20 ஜூன் 2025

முந்தைய மாத ராசி பலன்

rasi

கும்பம்

அவிட்டம் 3, 4 ம் பாதம்
துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு  ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சப்தம ஸ்தானத்தில் நட்சத்திராதிபதி செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்குள் சிறு பிரச்னைகள் ஏற்படும். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடிய நிலை ஏற்படும். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையில் முடிவு ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வார்த்தைக்கு மதிப்புண்டாகும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். உங்கள் முகத்தில் இருந்த கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைக்குரிய பாதை தெரியும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் தோன்றிய தடைகள் விலகும். பெண்களின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உழைப்பாளர் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 1.
அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 18, 26, 27. ஜூலை 8, 9.
பரிகாரம்: அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.

சதயம்
 ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்து நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் ராகு, சனி சஞ்சரித்து நெருக்கடிகளை அதிகரித்தாலும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் அவையெல்லாம் உங்களை நெருங்காமல் போகும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகளும், போராட்ட நிலையும் மறையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். சரியான நேரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். வேண்டுதலை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உடல்நிலையில் தெளிவு ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் பணம் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 2, 3.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 22, 26. ஜூலை. 4, 8, 13.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
குருவின் அருள் பெற்று உயர்வு காணும் வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி யோகமான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞானக்காரகன் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்பனையில் ஏற்பட்டிருந்த மந்தநிலை மாறும். தொழில் வளர்ச்சி பெறும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியடையும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். ஏழாம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் சஞ்சரிப்பதால் நட்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச் செல்வது அவசியம். கூட்டுத் தொழிலில் உங்கள் நேரடிப் பார்வை இருந்தால் எதிர்பார்த்த லாபம் காண முடியும். பணியாளர்கள் தங்களுடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். 
சந்திராஷ்டமம்: ஜூலை 3, 4.
அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 21, 26, 30. ஜூலை. 8, 12.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap