Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
15 அக் 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

மகரம்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: நீதி நேர்மை நியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. முன்புபோல், எல்லாம் எளிதாக நடந்து விடும். உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு  பலன்கள் கிடைக்கும். ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு யோகமான நிலையினை உண்டாக்குவார். செவ்வாய் சஞ்சரிப்பதால் அதுவரை உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்ப்பு இல்லாமல் போகும்  சக்தி வெளிப்படும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை  சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாதம் முழுவதும் சூரியன் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்ளக்கூடிய சக்தி ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.
சந்திராஷ்டமம்: அக் 26, 27.
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 26. நவ 1, 8, 10.
பரிகாரம்: வராகியை வழிபட வளம் உண்டாகும்.

திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். இதுவரை உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். மிக எளிதாக நடைபெற்ற வேலை கூட இப்போது கடும் முயற்சியால் தான் முடிவிற்கு வரும். மாதத்தின் முதல் வாரத்தில் நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரம் சாதகமாகும். அதன் பிறகு சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அதற்குள் அனைத்தையும் முடித்துக் கொள்வது நல்லது. மாதம் முழுவதும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். முழு நேரமும் தொழில் பற்றிய சிந்தனையே உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு யோகப் பலன்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சியின் அளவிற்கு உங்களுக்கு லாபம் ஏற்படும்.  ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. இதற்கு முன்பு எளிதாக இருந்த வரவில் இப்போது தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். இயந்திரப் பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போது கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இக்காலத்தில்  நன்மை தரும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலைமை உண்டாகும். இதுவரை கிடைத்து வந்த முன்னேற்றம் அந்தஸ்தில் சில பின்னடைவுகள் தோன்றக்கூடும் ஒவ்வொன்றிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது இக்காலத்தில் அவசியமானதாகும். பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும், அவசர செயல்களை தவிர்ப்பதும் சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தினப்பணியாளர்கள், சிறு வியாபாரிகள் எந்த ஒன்றிலும் அவசரப்பட வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: அக் 27, 28
அதிர்ஷ்ட நாள்: அக் 20, 26, 29. நவ 2, 8, 11.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 ம் பாதம்: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திர நாதனால் உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அதன் பிறகு கவனமாக செயல்படுவது அவசியம். மாதம் முழுவதும் முயற்சி ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிட உள்ளனர். எந்த அளவிற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய ஒப்பந்தம் வரும். வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அங்கீகாரம் உண்டாகும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை, பணவரவு என்பது இருக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகும். பணவரவில் தடை, தாமதம் என்ற நிலை ஏற்படும், உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அளவிற்கு சூழ்நிலை மாறும். எல்லாவற்றிலும் கவனமாக செயல்படுவது மட்டும் தான் இக்காலத்தில் உங்களுக்கு நன்மையாக இருக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் அவரின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 
சந்திராஷ்டமம்: அக் 28
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26. நவ 8, 9.
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap