Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
11 பிப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மகரம்

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைகின்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதிற்குள் இனம் புரியாத குழப்பம் இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்குமா என யோசிப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி சற்று குறையும். உங்களது பேச்சால் வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வரவு, செலவிலும் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப உறவுகளுடன் ஒரு இடைவெளி இருக்கும். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் தேவையான பணம் வரும். தொழிலில் வழக்கமான நிலை இருக்கும். வாழ்க்கைத்துணை  உறுதுணையாக இருப்பார். மேலதிகாரியை அனுசரித்துச்செல்வது நன்மையை ஏற்படுத்தும். எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதும், புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். வெல்லாமை வீடு வந்து சேரும்வரை விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. 
சந்திராஷ்டமம்: மார்ச் 2.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 19, 26, 28. மார்ச் 1, 8, 10.
பரிகாரம்
அருணாச்சலேஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

திருவோணம் 
பிறந்ததில் இருந்து முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சூரியன் உங்கள் முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்துவர். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். யாரை நம்பி இருந்தீர்களோ அவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் இந்த நிலையில் மாற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு பண வரவில் தடை ஏற்படும்.  பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். சிலருக்கு உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும் என்றாலும், மார்ச். 6 முதல் ராசி நாதன் சனி பகவான் சகாய ஸ்தானத்திற்கு செல்வதால் ஏழரை ஆண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலைமாறும். வீண் செலவு, அலைச்சல் என்றிருந்த நிலை மாறும். ஆதாயத்திற்குரிய வழிகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்திலும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிப். 20 வரை உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். 
சந்திராஷ்டமம்: மார்ச் 3.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 20, 26. மார்ச் 2, 8, 11.
பரிகாரம்
வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 ம் பாதம்
எடுத்த வேலையில் வெற்றி அடைவதற்காக மலையளவு முயற்சிகளை மேற்கொள்கின்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், சுகாதிபதியுமான செவ்வாய் பிப். 21 வரை ராசிக்குள்ளும், அதன் பிறகு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். சில வேலைகளில் திட்டமிடாமல் இறங்கி, சங்கடத்திற்கு ஆளாவீர். உடல் நிலையிலும் உஷ்ணம் சார்ந்த பாதிப்புகள் தோன்றும். வியாபாரத்தில் மறைமுகத் தொல்லைகளும் எதிர்ப்பும் தோன்றும் என்றாலும், மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிக்கும் சுக்கிரனும், மார்ச். 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி நாதனும், பிப். 20 வரை புதனும் உங்களைப் பாதுகாப்பர். எந்தநிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். எதிர்பார்க்கும் அளவிற்கு வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்திலும் வெளிவட்டாரத்திலும் மறைமுக எதிர்ப்புகள் உங்களை சங்கடப்படுத்தும். சகபணியாளர்களின் வேலைகளை நீங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வியாபார ரீதியாக திடீரென வெளியூர் பயணம் ஏற்படும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளியும் இந்த நேரத்தில் உருவாகும். சூரியன், ராகு, செவ்வாய் சஞ்சாரம் உங்கள் நிலையில் பின்னடைவை உண்டாக்கும், பொருளாதார நிலையிலும் சங்கடங்களை அதிகரிக்கும். ஆனாலும் அதை நிதானமாக கையாண்டு வெற்றி பெறுவீர்.  குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று பெண்கள் செயல்படுவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 4.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, 27. மார்ச் 8, 9.
பரிகாரம்
திருப்போரூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap