Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/தனுசு

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

மாத ராசி பலன் : தனுசு
10 ஏப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

தனுசு

தனுசு

மூலம்
தைரியமும், தெய்வ நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, தன குடும்பாதிபதியும் சகாய ஸ்தானாதிபதியுமான சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இதுவரை சுமூகமாக நடைபெற்று வந்த வேலைகளில் தடை ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுகூடும். தாயாரின் உடல்நிலையில் சங்கடங்கள், தாய்வழி உறவுகளுடன் பகை என்று ஏற்படுவதுடன், வீடு வாகனம் வகையில் செலவுகள் ஏற்படும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உழைப்பாளர்களின் மரியாதை அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம்வரும். தொழிலில் வேலையாட்களால் பிரச்னை, எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்ற நிலையெல்லாம் விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கூட்டுத்தொழில் ஆதாயமடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் மணமேடையிலும் ஏறுவீர்கள். மே 9 முதல் உங்கள் ஜீவனாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம்வரும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் தொண்டர்களின் பலமும் கூடும். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 23, 24.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 21, 25, 30. மே 3, 5, 12, 14.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பூராடம்
பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசி, மற்றும் லாப, சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப எடுக்கும் வேலையெல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரம்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிவு ஏற்பட்டு டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம்வரை சென்றவர்களும் பெரியோர் அறிவுரைகளால் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும், மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஏப். 24, 25.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 21, 30. மே 3, 6, 12.

பரிகாரம்: கந்தனை வழிபட காரியம் கைகூடும். நன்மைகள் நடக்கும்.

உத்திராடம் 1 ம் பாதம்
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறி வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் பாக்யாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலைத்தேடி வருபவர்களுக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.  பெரியோரின் ஆதரவால் நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பிள்ளைகளால்  பெருமை உண்டாகும். ஏப். 20 வரை உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சாதமாக சஞ்சரிப்பதால் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியமாகவும் பகட்டாகவும் நடைபோடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நவீன பொருட்கள் சேரும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 9 முதல் புதன் என்று உங்கள் வாழ்க்கையில் நன்மைக்குமேல் நன்மைகளை ஏற்படுத்துவர். பிறரை நம்பி செயல்பட்டு வந்தநிலை மாறும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். நீண்டகால முயற்சிகள் வெற்றியாகும். உயர் கல்வி, வேலை, திருமணம், சொந்த வீடு,  பட்டம், பதவி என்ற அவரவரின் கனவுகள் நனவாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 26.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 21, 28, 30. மே 1, 3, 10, 12.

பரிகாரம்: அமிர்தகடேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap