Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/தனுசு

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

மாத ராசி பலன் : தனுசு
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

தனுசு

தனுசு: மூலம்

நியாயம் நேர்மையை மூச்சாக கொண்டு தர்ம சிந்தனையோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிட்டும். பெரியோரின் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். மே 26 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், சனி பகவானின் 10 ம் பார்வையால் ஏற்படும் சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர் பார்ப்பு பூர்த்தியாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கி எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தேர்தலில் உழைத்த உழைப்பிற்கு தலைமையின் பரிசு கிடைக்கும். மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகளால் உங்கள் நிலை உயரும். விரய செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு விலகும். உணவகம், விவசாயம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களின் கவலைகள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடைபோடுவீர்.
சந்திராஷ்டமம்: மே 21.
அதிர்ஷ்ட நாள்: மே 16, 25, 30. ஜூன் 3, 7, 12.
பரிகாரம்: மணக்குள விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பூராடம்: அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ஜூன் 10 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். தனக்குப் பிடித்தமானவருக்காக செலவு செய்வீர்கள். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். தேர்தல் களத்தில் வேலைப்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் வைகாசி மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் இருந்த பயம் போகும். புதிய வலிமை உண்டாகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை  முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவியிலும் உயர்வு ஏற்படும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வம்பு வழக்கு என சிரமப்பட்டவர்களுக்கு விடுதலைக் கிடைக்கும். செல்வாக்கு உயரும். சகாய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி எல்லாம் பெரியதாகவே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மே 27 வரை வித்யாகாரகன் புதன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: மே 22.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நினைத்த வேலை நடக்கும்.

உத்திராடம் 1 ம் பாதம்: வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் எடுக்கின்ற வேலை வெற்றியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் தேடி வரும். தனியார் துறையில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு வேறு நிறுவனத்தில் சம்பள உயர்வுடன் தகுதிக்குரிய வேலையோடு அழைப்பு வரும். வியாபாரம் தொழிலில் இருந்த மந்த நிலை மாறி லாபம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தி ஆதாயம் காண்பீர்கள். பங்குதாரர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்வர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு அல்லது பதவி கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர் இந்த நேரத்தில் உங்களை விட்டு விலகி இருப்பர். நினைத்ததை சாதித்திடக் கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். கௌரவம் அந்தஸ்து என்பதெல்லாம் தேடி வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கிடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொருளாதார நிலை உயரும். ஆலோசகர்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். பணியாளர்களுடைய ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம்: மே 23.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30. ஜூன் 1, 3, 10, 12.

பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். தடைகள் விலகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap