Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/துலாம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

மாத ராசி பலன் : துலாம்
11 மார் 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

துலாம்சித்திரை 3,4 ம் பாதம்:அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரிய, வீரிய, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாக இருப்பீர்கள். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக அமையும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரனும், பாக்கியாதிபதி புதனும் பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துகளில் சில பிரச்னைகள் தோன்றும் என்றாலும் அதை நிதானமாக செயல்பட்டு உங்கள் வசமாக்குவீர்கள். குருபகவானின் பார்வை உங்களுக்கிருப்பதால் சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு அதற்குரிய தகவல் வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் அளிக்கும்.  விருப்பங்கள் நிறைவேறும். சுயதொழிலில் வருமானம் அதிகரிக்கும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் வரும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் கூடுதல் கவனமுடன் படிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 16,17, ஏப். 13
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,18,24,27, ஏப். 6,9
பரிகாரம்: அனுமனை வழிபட்டால் அல்லல் அனைத்தும் பறந்தோடும்.

சுவாதி:கலைக்காரகன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், யோகம், போகக்காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும். உங்கள் செயல்பாடுகளின் காரணமாக நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் பெரும் மாற்றத்தை உண்டாக்கப் போகிறது. எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறப் போகிறது. ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகு, புதனால் இதுவரையில் முயற்சி செய்து  தடைப்பட்ட காரியங்கள் இப்போது நிறைவேற ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்திற்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பணியாளர்களுக்கு இது யோகமான காலமாக இருக்கும். வம்பு, வழக்குகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசு வழி செயல்களில் ஆதாயம் வரும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குருபகவானின் பார்வை ராசியில் பதிவதால் சங்கடங்கள் எல்லாம் விலகி நினைத்ததை அடையும் நிலை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணம் பலவழியில் வர ஆரம்பிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 17,18.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,22,24,31, ஏப். 4,6,13
பரிகாரம் வராகியை வணங்கினால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3 ம் பாதம்: தன, புத்திர, ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டகாரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் நிறைந்திருக்கும். மற்றவரை உங்கள் வழியில் ஈர்த்து செல்லக்கூடிய திறமை இருக்கும்.  உங்கள் நட்சத்திரநாதன் ராசியைப் பார்ப்பதால் அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்திருக்கும்.  சங்கடங்கள் விலகிப் போகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் அலுவலகத்தில் எதிர்பார்த்த பொறுப்பும் வந்து சேரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன், ராகுவால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி இப்போது கிடைக்கும். தடைப்பட்ட செயல்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.  வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அதற்குரிய அரசு அனுமதி கிடைக்கும். வழக்குகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிரி தொல்லை நீங்கும். உடல் பாதிப்பு மறையும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். குருபகவானின் பார்வை லாப ஸ்தானம், ஜென்ம ராசிக்கு உண்டாவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனையை தலைமை ஏற்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு விருப்பம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 18,19.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,21,24,30, ஏப். 3,6,12.
பரிகாரம்: முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap