Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/துலாம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

மாத ராசி பலன் : துலாம்
10 ஏப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

துலாம்

துலாம்

சித்திரை 3, 4 ம் பாதம்
உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் மே 10 வரை சஞ்சரிக்கும் தைரிய வீரிய காரகனான செவ்வாய் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை செய்து அதில் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் பலம் கூடும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நெருக்கடியால் கடனுக்கு மேல் கடன் வாங்கி வந்த நிலை மாறும். கடன்களை அடைக்கும் அளவிற்கு கையில் பணம் புழங்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனி பகவானும் சஞ்சரிப்பதால் பார்க்கும் வேலைகளில் நிதானம் வேண்டும். ஒரு பக்கம் வேகமாக செயல்பட நினைத்தாலும் மறுபக்கம் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். எனவே திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வழி பிறக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 19.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.

பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் விலகும். நன்மைகள் நடக்கும்.

சுவாதி
எடுத்த வேலைகளை எப்பாடுபட்டாவது முடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் தடை, குடும்பத்தில் நெருக்கடி, குழந்தைகளால் பிரச்னைகளை உண்டாக்கி வந்தாலும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் கடந்தகால நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய சொத்து, வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் ஏப். 20 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது நன்மையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையின் ஆலோசனைகள் இந்த நேரத்தில் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாத நிலை உருவாகும். பாக்யாதிபதி புதன் ஏப். 23 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 20.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 22, மே 4, 5, 13, 14.

பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

விருச்சிகம் 1, 2, 3 ம் பாதம்
சுய முன்னேற்றத்தில் அக்கறையாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இதுவரை இருந்த போராட்டங்களுக்கு முடிவு கட்டுவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற பாதையைக் காட்டுவார். பல்வேறு சங்கடங்களை சந்தித்து வாழ்க்கையின் கடைசி எல்லைவரை சென்றிருக்கும் உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை, குடும்பத்திலும் நிம்மதியில்லை என்றிருந்த நிலைமாறும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். இதுவரை பல வகையில் முயற்சித்தும் கை கூடி வராத வேலைகள் இனி உங்கள் எண்ணப்படி முடிவிற்கு வரும்.  சகோதரர்கள் ஒத்துழைப்பும், பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதிய சொத்து வீடு என்று வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயம் எதிர்பார்த்த லாபம் தரும். முதியவர்களுக்கு ஏற்பட்ட நலிவு நீங்கும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். மாணவர்களின் கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 21.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 24, 30. மே 3, 6, 12.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.
................

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap