Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/துலாம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

மாத ராசி பலன் : துலாம்
20 ஜூன் 2025

முந்தைய மாத ராசி பலன்

rasi

துலாம்

சித்திரை 3, 4 ம் பாதம்
தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், கேதுவும் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார்கள். பணவரவை அதிகரிப்பர். செய்து வரும் வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவர். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணியாளர்கள் ஒத்துழைப்பிற்கு வழிகாட்டுவர். வரவேண்டிய பணம் வரும். விவசாயம், மருத்துவம், கெமிக்கல் உணவகத் தொழில்கள் முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஐந்தாம் இடத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருந்தவர்களின் ஏக்கம் நிறைவேறும்.  குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். பெண்களின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 22, 23.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24. ஜூலை 6, 9, 15.
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

சுவாதி
எங்கும் எதிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்கிய குருவின் பார்வையுடன் ஐந்தாம் இடத்தில் ராகுவும், சனியும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு புது இடம், வீடு வாங்கும் யோகம் தோன்றும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் இக்காலத்தில் உங்களின் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை  சாதிக்கும் நிலை உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேதுவால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். வருமானம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். கடன்காரர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், குழப்பங்கள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ஜூன் 29 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து எதிர்பாலினரால் சங்கடங்களை உண்டாக்கி வந்தாலும் அதன் பிறகு உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துவார். பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயத்தில் லாபம் உண்டாகும். உழைப்பாளர்கள் சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 23, 24.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, ஜூலை 4, 6, 13, 15.
பரிகாரம்: பத்ரகாளியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதம்
எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி முன்னேற்றமான மாதமாகும். ஞானகாரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்களின் நிலை மாறும். உங்களின் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். முயற்சி ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனியை குரு பார்ப்பதால் இதுவரை குடும்பத்தில் இருந்த நெருக்கடி, பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்தில் உண்டான தகராறு யாவும் விலகும். விருப்பம் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, செவ்வாயால் வருமானம் உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களின் நீண்டநாள் கனவு நனவாகும். தனியார் நிறுவனத்தில் பயத்துடன் பணியாற்றி வந்தவர்களின் பயம் போகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 24.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 30, ஜூலை 3, 6, 12, 15.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap