Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/விருச்சிகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

மாத ராசி பலன் : விருச்சிகம்
12 ஏப் 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

விருச்சிகம்விசாகம் 4 ம் பாதம்: தைரிய வீரிய காரகனான செவ்வாய், விவேகத்திற்கும் வித்தைகளுக்கும் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் தைரியமும் மன உறுதியும் பிறவி சொத்தாகும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு புத்தொளி வழங்கும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் ஒரு வருடமாக ஆறாம் இடத்தில் சஞ்சரித்து வரும் நிலையில் மே. 1 முதல் 7 ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வாரத்தை இப்போது உங்கள் வாழ்க்கையில் மெய்ப்பட போகிறது. இது நாள் வரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகப் போகிறது. உங்கள் வாழ்க்கையில் அந்தஸ்தும் கௌரவமும் உண்டாகப் போகிறது. பொருளாதார சங்கடங்களில் இருந்து விடுபட போகிறீர்கள். புதிய வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல், செய்து வரும் தொழிலில் முன்னேற்றம்,  புதிய சொத்து சேர்க்கை என்ற கனவெல்லாம் உங்களுக்கு நனவாக போகிறது. கேது பகவானும் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வருமானத்தை அதிகரித்திட இருக்கிறார். எல்லா வகையிலும் இந்த மாதம் உங்களுக்கு ஒரு யோகமான மாதமாக இருக்கப் போகிறது. வெளிநாட்டு முயற்சிகள், கூட்டுத் தொழில்கள் யாவற்றிலும் இனி வெற்றி என்றே சொல்ல வேண்டும். வருமானம் பல வகையிலும் வர ஆரம்பிக்கும். சங்கடங்கள் விலகும். உடலில் இருந்த பாதிப்புகள் உங்களை விட்டு விலகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில், பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்
சந்திராஷ்டமம்: ஏப். 15. மே. 13.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 18,21,27,30. மே. 3,9,12.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை அதிகரிக்கும்.

அனுஷம்: ஆயுள்காரகன், தொழில்காரகன், கர்மக்காரகனான சனி, ரத்த யுத்த சகோதர காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு யோசித்து செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய சக்தி இருக்கும். எந்தவொரு செயலைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கின்ற வலிமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோக மாதமாக இருக்கப் போகிறது. நட்சத்திர நாதன் சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் அவருடைய 10ம் பார்வையும் உங்கள் ராசிக்கு ஏற்பட்டிருப்பதால் உடல், மனம், தொழில், உத்தியோகம், வருவாய் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை நீங்கள் அடைந்து வந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் 6 ல் உச்சம் பெறுவதால் நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.  தொழிலில் உண்டான தடைகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அரசாங்க ரீதியாக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கடந்த கால சங்கடங்களுக்கு முடிவு ஏற்படும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் சங்கடங்கள் யாவும் விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். உடல் நிலையும் மனநிலையும் சீராகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதிதாக இடம் வாங்குவது வாகனம் வாங்குவது என விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 16, மே 13
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,18, 26, 27, மே 8,9
பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும்.

கேட்டை: கல்விக்கும், வித்தைக்கும் காரகனான புதன், ரத்த காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு ஒரு பக்கம் வேகம் மறுபக்கம் விவேகம் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்கள் நீங்களாக இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை உண்டாக்கும்.  இதுவரையில் நீங்கள் அடைந்த சங்கடம் அனைத்தும் தீரும். லாப ஸ்தானத்தில் கேது, 6ம் இடத்தில் சூரியன் என இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சூரியனும் கேதுவும் நன்மைகளை வழங்க உள்ள நிலையில், மே1 முதல் குருபகவானும் 7ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகத்தை வழங்க உள்ளார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற நிலையின்படி இனி உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடிகள் விலகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்திலிருந்த தடைகள் நீங்கும். வருமானம் உயரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.. உடலில் இருந்த சங்கடங்கள் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மாதத்தின் பிற்பகுதியில் நட்சத்திரநாதன் புதனின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். பெண்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்து வருபவர்களின் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பர்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதன் மூலம் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். மாணவர்களின் மேற்கல்வி கனவு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 17,18.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,23,27, மே 5,9
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை பன்மடங்காகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap