Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/விருச்சிகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

மாத ராசி பலன் : விருச்சிகம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்

எல்லோருக்கும் முன்னோடியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். தேவகுரு மே 26 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை விரயம், தன,குடும்பம், சுக ஸ்தானங்களைப் பார்ப்பதால் வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் மேம்படும். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும் பார்ப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். நன்மை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதாரத்தில் நிறைவு உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம், தொழில் லாபம் தரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் பிள்ளை பற்றிய கவலை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனக் குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். எந்தவொரு முடிவிற்கும் வர முடியாமல் தவித்து வந்த நீங்கள் இதுதான் வாழ்க்கை இதுதான் பாதை என்று தெளிவாக செயல்படுவீர். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும் தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பொருளாதார நிலை உயரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 19.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30. ஜூன் 3, 9, 12.
பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருவிற்கு வியாழக்கிழமை நெய்தீபம் ஏற்ற வாழ்வில் வளம் கூடும்.

அனுஷம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம், செயல்களில் தடுமாற்றம், பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளுக்காக சங்கடம் என்ற நிலை ஏற்படும். மே 26 முதல் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், 3, ம் இடத்தையும், 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும்  பார்ப்பதால், உங்களுக்கிருந்த சங்கடம் எல்லாம் விலகும். தடைக்கற்களாக இருந்தவை எல்லாம் படிக்கற்களாக மாறும். வியாபாரம்,  தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பல நாட்களாக பல்வேறு முயற்சி எடுத்தும் நடைபெறாமல் இருந்த வேலை முடியும். கடன்களால் கலங்கிய நிலைமாறும். எதிர்பார்த்த பணம் வரும். கையிருப்பு உயரும். உடலில் இருந்த பாதிப்பு விலகும். உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விலகி இருந்த சகோதரர்கள் உங்களை தேடி வருவார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மாதம் முழுவதும் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதித்து முடிப்பீர். எதற்காகவும் பின்வாங்க மாட்டீர்கள். அரசியல்வாதிகள் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். பெண்களுக்கு உடல், மனரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: மே 19, 20.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.

கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியாக நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் திட்டம் வெற்றியாகும். நேற்றைய முயற்சி சாதகமாகும் வரவு அதிகரிக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் ஆடை ஆபரணம் சேரும். உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். கம்பீரமாக நடைபோடுவீர். மே 27 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பொருளாதார நிலையை உயர்த்துவார். முயற்சி செய்தும் வராமல் இருந்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட போராட்ட நிலை மாறும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.
ஜூன் 10 முதல் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்று அமையும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வசதியான இடத்திற்கு குடியேறுவீர். வேலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலர் வசிக்கும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்வீர். சிலர் வசதிக்காக இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வீர். மே 26 முதல் குரு பகவான், உங்களுக்கு பாக்ய குருவாக சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.
சந்திராஷ்டமம்: மே 20.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap