Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்/கன்னி

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : கன்னி
15 ஏப் 2022

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கன்னிஉத்திரம் 2, 3,4 பாதம்: வாழ்க்கையில் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் காரிய தடை தாமதம் நீங்கும். பயணங்கள் ஏற்படலாம். குரு பார்வையால் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாள் நோய் கூட பறந்தோடும். தொழில் வியாபாரத்தில் லாபம் மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் திடீர் பிரச்னை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த ஒரு சிக்கலான பிரச்னைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகள் வெளிப்படும். சக கலைஞர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது. ஆசிரியர்கள், பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றுவர்.
பரிகாரம்:  ஐயப்பனை வணங்கி வர எல்லா நன்மை உண்டாகும்.
.
அஸ்தம்: திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த புத்தாண்டில் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். விருப்பம் போல ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: காவல் தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்பு விலகும்.
.
சித்திரை 1, 2 பாதம்
நேரத்தின் மதிப்பை அறிந்த உங்களுக்கு இந்த புத்தாண்டில் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகள், மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிதவேகத்தை பின்பற்றுவது நன்மையளிக்கும்.
பரிகாரம்: சரஸ்வதிக்கு தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap