Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்/விருச்சிகம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : விருச்சிகம்
04 ஏப் 2020

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

விருச்சிகம்மதிநுட்பம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருவால் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும்.  குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஜூலை 7 முதல்  நவ.13 வரை குருவால் அதிக நன்மை காணலாம். உங்களின் ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். சனிபகவானால் பொருளாதார இழப்பு ஏற்படும். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். ஆனால் அவரது10ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். வருங்காலத்தை வளர்பிறை காலமாக மாற்றும் விதத்தில் டிச.26ல் சனிபகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இது உன்னத நிலை. அவர் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.

 ராகு உறவினர்கள் வகையில் பிரச்னைகளை உருவாக்கலாம். முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். ஆக. 31க்கு பிறகு  அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரிடும். யாரிடமும் கவனமாக பழக வேண்டும். கேதுவால் அரசின் வகையில் சிக்கல் வரலாம். ஆக.31க்கு பிறகு அவர் உடல் உபாதையை தரலாம்.  ஆண்டின் தொடக்கத்தில் எந்த ஒரு முக்கிய செயலையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும் தம்பதியர்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்கவும். ஜூலை 7 முதல்  நவ.13 வரை கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.  அவர்கள் வருகையால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். டிச.26க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். புதிய வீடு,மனை, வாகனம் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 7க்கு பிறகு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர்.  நவம்பர் 11க்கு பிறகு குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆக.31க்கு பிறகு  உடல் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ஜூலை7க்கு பிறகு குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர், அச்சுத் தொழில் போன்றவை நல்ல வளர்ச்சி அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். டிச.26க்கு பிறகு பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* வியாபாரிகளுக்கு ஜூலை 7க்கு பிறகு வியாபாரத்தில் இருந்த பின்னடைவு மறையும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை குருவால் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்த்தவர்கள்  கூட உங்களிடம் சரணடைவர்.
* மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்புண்டு.
* வக்கீல்களுக்கு டிச.26க்கு பிறகு அபார ஆற்றல் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* ஆசிரியர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். தங்கள் கோரிக்கைகளை நவ.11க்குள் கேட்டு பெறவும். அதன்பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
* பொதுநல சேவகர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். புகழ், பாராட்டு வந்து சேரும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  நல்ல வசதியுடன் காணப்படுவர்.
* விவசாயம் சீராக நடக்கும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மஞ்சள், எள், துவரை, கொண்டைக்கடலை பழவகைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். டிச.26க்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
* பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு ஜூலை 7 முதல்  நவ.13 வரை ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். காலர்ஷிப், கல்விக்கடன்  கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள்  அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம்.அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தினரின் பெயரில் வியாபாரத்தை தொடங்கவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம்.
* அரசு பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். ஆனால் பதவி, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும் .உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
*  ஐ.டி., துறையினருக்கு நவ.11க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படும் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும்.
* அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். சிலர்  தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம்.
 * விவசாயிகள் கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. கால்நடை வளர்ப்பவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.  விரும்பிய பாடம் கிடைக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை
* திங்களன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap