Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/ராகு கேது பெயர்ச்சி பலன்கள்/சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : சிம்மம்
16 நவ 2012 to 16 ஜூன் 2014

முந்தைய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

சிம்மம்

எந்தநிலையிலும் மனம் கலங்காத சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பூர்வ புண்ணியம், ராசி ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ஆதாயம், சப்தம ஸ்தானங்களில் பதிகிறது. ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குவார். இவரது மூன்றாம் இட அமர்வு புதிய திட்டங்களை உருவாக்கி எளிதில் வெற்றி பெற துணைநிற்கும். உடல்நலத்தை பலப்படுத்தும். வீடு, வாகன வகையில் இருந்த மனசஞ்சலம் விலகும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர். வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும்.  எதிரிகள் விலகுவர். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணைநிற்கும். கேதுவின் அமர்வு ஆடம்பரச்செலவை ஏற்படுத்தும். புதியவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. வழக்கு, விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். வெகுநாள் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி உறவினர், நண்பர்களின் ஒத்துழைப்புடன் இனிதாக நிறைவேறும். மூத்த சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள்.

தொழிலதிபர்கள்: கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, தரம் உயரும். அதிக ஒப்பந்தங்கள், தாராள பணவரவு வரும். நவீன தொழில்நுட்ப கருவி வாங்குவீர்கள். புதிய கிளை துவங்க நல்யோகம் உண்டு.

வியாபாரிகள்: போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் கிடைக்கப்பெறுவர். விற்பனை சிறந்து தாராள பணவரவை பெற்றுத்தரும். பாக்கி வசூலாகி கூடுதல் மூலதனமாக பயன்படும். கிளைகளை அதிகரிக்கிற முயற்சி நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முழு கவனத்துடன் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகை எளிதாக கிடைக் கும். சக பணியாளர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகும். தாராள பணவரவு கிடைப்பதால் ஆடம்பரமான செலவு செய்வீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் திறமை வளர்க்க கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து செயல்படுவர். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி இருக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. ஆடை, ஆபரணச்சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை அளவை உயர்த்துவர். உபரி வருமானம் கிடைக்கும்.

மாணவர்கள்: படிப்புக்கு தேவையான பணவசதி சீராக கிடைக்கப்பெறுவர். அக்கறையுடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவீர்கள். வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்கள் உதவுவர். பெற்றோர் பாராட்டுகிற வகையில் நடந்து வெகுநாள் லட்சியங்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்: தாராள பணவசதி துணை நிற்கும். ஆதரவாளர்களின் மனப்பூர்வமான நம்பிக்கையும், செயல்திறனும் சமூகத்தில் கூடுதல் அந்தஸ்தை உருவாக்கும். எதிரிகள் விலகிப்போகிற நன்னிலை உண்டு. உடல்நலம் பலம்பெறும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். அரசியல் பணி சிறக்க புத்திரரின் செயல்பாடு உதவும். வழக்கு, விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாய பணி சிறக்க தேவையான மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு. கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்:
பொன்னார்மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் பலன்கள் அதிகமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap