sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

தனுசு

/

தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன் : தனுசு
22 ஆக 2020 to 16 மார் 2022

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

தனுசுஏழரைச்சனி தாக்கம், ராசியில் கேது அமர்வால் தடுமாறும் உங்களுக்கு ராகு, கேதுப் பெயர்ச்சி ஆறுதல் தரும். கேது 12ல் அமர்வதால் வீண் குழப்பம் நீங்கும். கனவு காணும் விஷயங்கள் நிஜத்தில் நடந்தேறும்.  சுயநலத்தை விட்டு பொது நலனுக்காக  உழைக்க வேண்டியிருக்கும். அடுத்தவர் பிரச்னையைத் தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். ராகு 6க்கு வருவது நன்மை தரும். அதே நேரம் வீண் விவகாரங்கள் குறுக்கிடலாம். நேர்மை மிக்க நீங்கள் புதிய நபர்களால் ஏமாற்றப்பட வாய்ப்புண்டு என்பதால் கவனமாக இருப்பது அவசியம். மொத்தத்தில் ராகு, கேது பெயர்ச்சி கெடுதலை விட நற்பலன் அதிகம் தரும்.

குடும்பம்: 7ல் இருந்து ராகு விலகுவதால் தடைகள் அகலும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெற்றோர், மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அவர்களின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனைவிவழி  உறவினர்கள் உங்களின் உதவியை நாடி வருவர்.

தொழில்: தொழில் ரீதியாக ஓய்வு எடுக்க நேரமிருக்காது. வேலைபளு அதிகரிக்கும். 2021 முற்பாதியில் எதிர்பார்த்த இடமாற்றம் வர வாய்ப்புண்டு. அரசு வேலைக்கு முயற்சிப்பதற்கு சாதகமான நேரம். வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ், சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ், பத்திரிகை துறையினர் ஏற்றம் பெறுவர். வெளிநாட்டு பணி வாய்ப்பு தேடி வரும். கலைத்துறையினர் மறைமுகப் போட்டியை சந்திப்பர். ஆசிரியர், புரோகிதர், ஜோதிடர்கள் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பர்.

நிதி நிலை : சுப செலவை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரம் உயரும். நவ.15 முதல் குருபலத்தால் வருமானம் கூடும். 2ல் சனி ஆட்சி பலத்துடன் அமர உள்ளதால் லாபம் அசையாக சொத்தாக மாறும். கடன் தொல்லை மறையும்.  

பெண்கள்: ஆன்மிக செலவு அதிகரிக்கும். சூழ்நிலை உணர்ந்து செலவை கட்டுப்படுத்துவது நல்லது. பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையும். குடும்பத்து விஷயத்தை வெளியில் செல்வதை விரும்பாத நீங்கள் மற்றவர் குடும்ப பிரச்னையை அறிய ஆர்வம் காட்டுவீர்கள். கணவரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்கள்: அறிவுத்திறன் பெருகும்.  கலைத்துறை போட்டிகளில் பங்கேற்று புகழ் பெறுவர். ஞாபக மறதியால் தேர்வில் குழப்பத்திற்கு சிலர் ஆளாகலாம். கணிதம், பொருளாதாரம், வணிகவியல், சட்டத்துறை மாணவர்கள் வளர்ச்சி காண்பர். ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் வெற்றி காண்பர்.

உடல்நிலை : நீண்ட நாளாக இருந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும்.  விலகும். சிலர் வாயுப்பிடிப்பு, தசைப்பிடிப்பால் அவதிப்படலாம்.

பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தினமும் காலையில் திருமந்திரம் படித்தல்
* ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல்

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us