sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

சனிப்பெயர்ச்சி பலன்கள்

/

மிதுனம்

/

மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் : மிதுனம்
04 மார் 2026 to 22 மார் 2028

முந்தைய சனிப்பெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம் :

மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்

தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் லாபத்தையும், யோகத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு செய்துவரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் உழைப்பையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அதிகரித்திடுவார். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியின் பார்வைகளால் ஏற்படும் சங்கடப் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மறைமுகத்தொல்லைகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 3,4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து யோகப் பலன்களை அதிகரிப்பர். பணவரவை உண்டாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர்.
3,4 ம் பாதத்தினருக்கு
நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக்கும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத்தொல்லைகள் விலகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்
திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, தொழில் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இருந்த இடம் தெரியாமல் செய்வார்.

பொதுப்பலன்
வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். சேமிப்பு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது முடிவிற்கு வரும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.

தொழில் 
தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபம் தரும். மருத்துவர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.

பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு பணியில் வழக்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைக்கிடைக்கும். தகுதி இல்லாத இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மீண்டும் தகுதியான இடத்தில் போஸ்டிங் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாவர்.

பெண்கள்
சமூகத்தில் தனி மரியாதை ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும்.

கல்வி
படிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். 

உடல்நிலை
நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.

குடும்பம்  
குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும். சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தம் குடும்பம், தம் பிள்ளைகள், எதிர்காலம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

திருவாதிரை:தொழிலில் கவனம் தேவை

வித்யகாரகன் புதன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் நட்பானவர். இதுவரை பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து என்று முன்னேற்றத்தை நோக்கி உங்களை நடைபோட வைத்தவர், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப் போகிறார். கர்மக்காரகனான சனி பகவான் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது நன்மையாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சரியான திட்ட மதிப்பீடு தயாரித்துக்கொள்வதும், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வதும் அவசியம். 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4,7,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தாயாரின் உடல்நிலையிலும் தன்னுடைய ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நலமாகும். வாழ்க்கைத்துணையுடனும் நண்பர்களுடனும் இணக்கமற்ற நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச்செல்வது மிக மிக அவசியம். எதிர்பாராத செலவுகளும் மறைமுகத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் ஜீவன சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதகப்பலன்கள்  உங்களை நெருங்காமல் போகும். தொழில், உத்தியோகம், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பத்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்க முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். நவ.13, 2026 முதல், ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும் மன நிலையிலும் பின்னடைவு ஏற்படும். வருமானம் பாதிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். வார்த்தைகளால் எதிர்ப்பு உருவாகும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக மிதுனத்திலும், சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் உயர்கல்வி,
திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, வசதி வாய்ப்பு என்ற எண்ணம் பூர்த்தியாகும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜீவன சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம்  உண்டாகும்.

பொதுப்பலன்
பத்தாமிட சனி நெருக்கடிகளை அதிகரித்தாலும், பாக்ய ராகு, சகாய கேது, குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகளால், வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். ஆரோக்யம் சீராகும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கடன்கள் அடைபடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

தொழில் 
தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், புதிய முதலீட்டில் நிதானம் தேவை. வெளிநாட்டு வர்த்தகம். நிதி நிறுவனம். இண்டஸ்ட்ரீஸ். ஐ.டி. பங்கு வர்த்தகம். வாகன விற்பனை. தொழிற்சாலை. டிராவல்ஸ். பதிப்பகம். கல்வி நிறுவனம். கமிஷன் ஏஜென்சி. சினிமா. சின்னத்திரை. வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும். மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

பணியாளர்கள்
வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் அலட்சியமாக செயல்படுபவர்களுக்கும் மெமோ எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும் என்பதால் இக்காலத்தில் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ஒருசிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.

பெண்கள்
பத்தாமிட சனியால் உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஒரு இடைவெளி ஏற்படும். வீண் செலவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், ராகு, கேது, குரு சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் அந்தஸ்து கௌரவம் என்று உங்கள் பயணம் இருக்கும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சமூகத்தில் உங்களுக்கென தனி மரியாதையை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பு காட்டுவீர்.

கல்வி
படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வதாலும் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதாலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். போட்டித்தேர்விலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்படும்.

உடல்நிலை
சுகம் மற்றும் விரய ஸ்தானங்களைப் பார்க்கும் சனி பகவானால் உடல்நிலையில் சின்னச்சின்ன பாதிப்புகள், பரம்பரை நோய்கள் பருவ நோய்கள் என்று தலைக்காட்டும் அதற்காக மருத்துவச் செலவு ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகளால் வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம்  
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ராகு, கேது, குரு சஞ்சாரங்கள் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம், வசதி வாய்ப்பு என்று நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி வேலை திருமணம் என்ற முயற்சிகளை மேற்கொள்வீர்.

பரிகாரம்:ஐயாவாடி பிரத்தியங்கிராவை வழிபட எதிர்ப்புகள் விலகும். வேண்டியது பலிக்கும்.

புனர்பூசம்:மாற்றம் காத்திருக்கு

ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதிக்கு சனி நட்பானவர் என்பதுடன் அவர் சஞ்சரிக்கப்போகும் ராசியும் குருவினுடைய மீன ராசி என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 10 ம் வீட்டிற்குரிய உத்தியோகம் தொழில் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அனைத்திலும் அக்கறையை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் போராட்டம் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். அனைத்திலும் யோகம் உண்டாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாக்ய சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். 

ராகு - கேது சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், நினைத்த வேலைகள் நடந்தேறும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். நவ. 13, 2026 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்.
4ம் பாதத்தினருக்கு
நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும், நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ராகு கேதுவால் எதிர்மறையான பலன்களே ஏற்படும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2,3ம் பாதத்தினருக்கு, மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். படிப்பு, உத்தியோகம், சுய தொழில் என்ற கனவு நனவாகும். 4 ம் பாதத்தினருக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.

பொதுப்பலன்
எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். அவமானங்களை சந்தித்து வந்த நிலைமாறும்.  வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பொன், பொருள், வீடு, வாகனம் சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும்.

தொழில் 
தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அலைபேசி, ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி தொழில்கள் எதிர்பார்த்த லாபத்தை தரும்

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் மரியாதையான பொறுப்பும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும்.

கல்வி
பொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். தவறான நட்புகளை விட்டு விலகுவதால் உயர் கல்வி என்ற உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். 

உடல்நிலை
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று ஏற்பட்ட செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று அவதிப்பட்டு வந்தநிலை மாறும். வயதானவர்களுக்கு மனதில் இருந்த பயம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம் 
குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். புதிய இடம் வீடு வாகனம் என்று சேரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களால் பெருமை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்:இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar