உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கென் கருணாஸ்

ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கென் கருணாஸ்

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் சமீபத்தில் வெளியான ‛யூத்' படம் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார். பள்ளி மாணவர்களின் பருவ குழப்பங்களை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றது. குறிப்பாக பிரபல கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி, யூத் படம் பார்த்துவிட்டு நீண்ட மக்களுக்குப் பிறகு ஒரு படத்தை சிரித்துக் கொண்டே பார்த்தேன் என்றால் அது யூத் படம் தான் என்று பாராட்டி இருந்தார்.

மேலும், “படத்தின் கதை இயக்கம் மற்றும் நடிப்பு மூன்றையும் ஒருவரே ஏற்றுக் கொண்டு அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டக் கூடியது. கென் கருணாஸ் சினிமாவின் மிகப்பெரிய சொத்தாக இருக்கப் போகிறார்” என்று சோசியல் மீடியா பக்கத்தில் பாராட்டி இருந்தார்.

இவரது சர்ப்ரைஸ் பாராட்டுக்களை எதிர்பாராத கென் கருணாஸ் சமீபத்தில் நேரடியாகவே ரிஷப் ஷெட்டியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து நேரிலும் அவரது வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டுள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கென் கருணாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !