'பாகுபலி 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'துரந்தர் 2'
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2016ல் வெளியான 'தங்கல்' படம் சுமார் 2000 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கிறது. அந்த 2000 கோடி ரூபாயில் சீனாவில் இருந்து கிடைத்த வசூல் மட்டுமே சுமார் 1300 கோடி. சீனா வசூல் இல்லை என்றால் 'தங்கல்' படம் முதலிடத்தைப் பிடித்திருக்க முடியாது. அந்த வசூலை வேறு எந்த இந்தியப் படமும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.
உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்திய படங்களில் 'தங்கல்' முதலிடத்தில் இருக்க, இரண்டாவது இடத்தில் 1810 கோடியுடன் 'பாகுபலி 2' படம் இருந்தது. அந்த வசூலை தற்போது 'துரந்தர் 2' முறியடித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'துரந்தர் 2' படம் தற்போது 1830 கோடி வசூலைக் கடந்துள்ளதாம்.
இன்னும் சில வெளிநாடுகளில் 'துரந்தர் 2' படம் வெளியாகவில்லை. அங்கெல்லாம் வெளியாகும் பட்சத்தில் படத்தின் வசூல் இன்னும் கூடுதலாக வாய்ப்புகள் உண்டு.