உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா

'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாக வேண்டிய படம் 'கருப்பு'.

இப்படம் சில சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதால் இன்று காலை 9 மணி காட்சிக்கு திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதை படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு நடுஇரவில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் படத்தின் சிக்கல் காலை 11 மணிக்குள் தீர்ந்துவிடும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்கள் சங்கம் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, சூர்யா போன்ற முன்னணி நடிகரின் படத்தின் வெளியீட்டிற்கு உள்ள சிக்கல் குறித்து தயாரிப்பாளருக்கு முன்பே தெரிந்திருந்தும், அதை முன்னரே தீர்த்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சுமார் 100 கோடி வரை தீர்த்து வைக்க வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். அதைத் தீர்த்துவிட்டால் படம் மதியக் காட்சி முதல் வெளியாகலாம் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.

இத்தனை கோடி கடன் பிரச்னையை தீர்த்து வைப்பதில் படத்தின் நாயகன் சூர்யா களத்தில் குதித்துள்ளதாக தகவல். கடன் தந்த பைனான்சியர்கள் தற்போதைக்கு சில கோடிகளை மட்டும் பின்னர் பெற்றுக் கொள்ள சம்மதித்து உள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !