வாசகர்கள் கருத்துகள் (1)
மலையாள பதிப்பில் ரேவதி நடித்த பாத்திரம் ஆண் நடிகர் நடித்திருப்பார். ஆனால் தமிழில் உருவாக்கும் போது பெண்ணாக மாற்றியிருப்பார் பாசில்... மசாலா மசாலா....
இயக்குநர்கள் சித்திக் - லால் கூட்டணியின் வெளிவந்த 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்' என்கிற மலையாளப் படத்தின் மறு உருவாக்கமே 'அரங்கேற்ற வேளை'. மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த பாசில், தமிழிற்கு வரும்போது டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தமிழிற்கு ஏற்ற வகையிலும், அதே சமயத்தில் மூலப் படைப்பின் ஆன்மா சிதைவுறாத வகையிலும் மாற்றம் செய்தார்.
நண்பனிடமிருந்து வாங்கிய கடனை அடைப்பதற்காகச் சென்னைக்கு வருவார் பிரபு. தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கும் பிரபு, வி.கே.ராமசாமி நடத்தி வரும் 'சக்தி நாடக சபா' குழுவில் இணைவார் பிரபு. இவரைப் போலவே இந்த இடத்தில் இன்னொருவரும் தங்கியிருப்பார். அவர் ரேவதி. ஏமாற்று வேலைகளின் மூலம் சம்பாதிக்கும் ரேவதிக்கும், பிரபுவிற்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடக்கும். “இந்த இடத்தை விட்டு உன்னை வெளியேத்திக் காட்டறேன் பாரு” என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்கள். பிரபு, ரேவதி, வி.கே.ஆர் ஆகிய மூவருக்குமே பணத்திற்கான தேவைகளும் அதற்குப் பின்னே நெகிழ்வான காரணங்களும் இருக்கும். இந்த மூவரின் பணச்சிக்கலும் தீருவதற்கு ஒரு போன் மூலம் வழி பிறக்கும், அது என்ன வழி, பிரச்னை தீர்ந்ததா என்பது கதை.
படத்தில் ரேவதியின் கேரக்டர் மற்றவர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றி பணம் பறிப்பது, கேரக்டரின் பெயர் 'மாஷா'. அரங்கேற்றவேளை வெளியான பிறகு இந்த கேரக்டர் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இதனால் இந்த கேரக்டரை மையப்படுத்தி ஒரு படம் இயக்க திட்டமிட்டார் பாசில்.
ஆனால் 2018-ல் வெளியான 'குலேபகாவலி' படத்திலும், 2019-ல் வெளியான 'ஜாக்பாட்' படத்திலும் இதே பாத்திரத்தின் தொடர்ச்சியாக 'மாஷா' என்ற பெயரிலேயே நடித்திருந்தார் ரேவதி. அதனால் தனது திட்டத்தை கைவிட்டார் பாசில்.
மலையாள பதிப்பில் ரேவதி நடித்த பாத்திரம் ஆண் நடிகர் நடித்திருப்பார். ஆனால் தமிழில் உருவாக்கும் போது பெண்ணாக மாற்றியிருப்பார் பாசில்... மசாலா மசாலா....