உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக விஞ்ஞானியாக மாறிய சிவாஜி

பிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக விஞ்ஞானியாக மாறிய சிவாஜி

1960ம் ஆண்டு வெளிவந்த படம் 'குழந்தைகள் கண்ட குடியரசு'. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் 'பில்லாலு தெச்சினா சல்லானி ராஜ்யம்' என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. இரண்டு மொழிக்கும் தனி தனி நடிகர்கள் நடித்தனர். இப்படத்தில் பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா, வல்லூரி பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் 'மக்கள் ராஜ்யம்' என்ற பெயரில் உருவானது. கன்னட பதிப்பில் நரசிம்மராஜு மற்றும் பாலகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்தனர். குழந்தைகளுக்கான படம் என்பதால் கேவா கலரில் தயாரிக்கப்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் சிவாஜி கவுரவ தோற்றத்தில் நடித்தார். குழந்தைகளுக்கு உதவும் விஞ்ஞானி கேரக்டரில் நடித்தார். இதற்காக மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவரை விஞ்ஞானியாக மாற்றினார்கள். சிவாஜி கவுரவ தோற்றத்தில் நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !