மீண்டும் லோகேஷ், அருண் மாதேஸ்வரன் இணைகிறார்கள்
அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ்கனகராஜ் படத்தில் வன்முறை அதிகம், ரத்தம் தெறிகிறது என விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் வசூலுக்கு பாதிப்பில்லை. நிச்சயம் 50 கோடி வசூலை தாண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி இணையப் போகிறதாம்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பது உறுதியாகி உள்ளதாம். வழக்கம்போல் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். இப்போது அல்லு அர்ஜூன் இயக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் லோகேஷ். அந்த படம் முடிந்தபின் அல்லது அந்த படம் நடக்கும்போதே நடிக்கப் போகிறாராம். ஹீரோயின், மற்ற நடிகர்கள் மாற வாய்ப்புள்ளது. முதல் படத்தை விட இந்த படத்துக்கு லோகேஷ், அருண் மாதேஸ்வரனுக்கு சம்பளம் அதிகம். அதேசமயம் வழக்கம்போல் அந்த படமும் வன்முறை, ஆக் ஷன் படமாக அல்லது டிசி 2வாக இருக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
ஆனால், இன்னொரு தரப்போ இப்படி படம் உருவாவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. லோகேஷ் கனகராஜ் அடுத்து படம் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார். அல்லு அர்ஜூன் படத்துக்குபின் கார்த்தியின் கைதி 2 உட்பட சில படம் இயக்க உள்ளார் என்கிறார்கள்.