உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்... : ஷாலினி நடிப்பாரா?

அஜித் படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்... : ஷாலினி நடிப்பாரா?

ஆதிக் ரவிசந்திரன் இயக்க, அஜித் நடிக்கும், ‛டேர் டெவில்' படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்திலும், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்னொரு முன்னணி கேரக்டரிலும் நடிக்கப் போகிறார்களாம். தமிழ் படங்களில் அவ்வப்போது நடிப்பது மோகன்லாலுக்கு வழக்கம். என் கேரக்டரை மட்டுமே பார்ப்பேன். சின்ன படம், சின்ன பட்ஜெட் என பார்க்கமாட்டேன். அப்படிதான் தமிழில் நடித்து இருக்கிறேன் என ஒருமுறை மோகன்லால் சொல்லியிருக்கிறார்.

இப்போது ஜெயிலர் 2வில் நடித்து இருக்கிறார். வெங்கடேஷ் இப்போதைக்கு தமிழில் நடிக்கவில்லை. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் சினிமா மீதுபாசம் உண்டு. அவரும் அஜித் படம் என்பதால் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். ஹீரோயினை தேடிக் கொண்டு இருக்கிறார் ஆதிக். அந்த படத்தில் தயாரிப்பாளர் ஷாலினி சின்ன வேடத்தில் அல்லது பாடல் காட்சியிலாவது வர வேண்டும் என்பது ரசிகர்களின் விரும்பமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !