UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 06:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் இயக்ககத்தின் கீழ் மதுரை மத்திய சிறை கைதிகளில் 107 பேருக்கு எழுத்தறிவுத் திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு நடந்தது. மாநில திட்ட இயக்குனர் நாகராஜ முருகன் பார்வையிட்டார். சிறை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் தேர்வு பொறுப்பு அலுவலராகவும், ஜெயிலர் கண்ணன் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக செயல்பட்டனர்.டி.ஐ.ஜி., பழனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, உதவி திட்ட அலுவலர் கார்மேகம் பங்கேற்றனர்.தேர்வில் வெற்றிபெறுவோருக்கு கல்விச் சான்றுகள் வழங்கப்படும். இத்தேர்வை 8 மத்திய சிறைகள், ஒரு மாவட்ட சிறையில் 1249 கைதிகள் எழுதினர்.இத்திட்டம் தமிழக அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது.