/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர் நிலைகளை துார் வார மக்களை அனுமதிக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : மார் 26, 2025 03:58 AM
புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் சம்பத் எம்.எம்.ஏ., பேசியதாவது:
கோடை காலம் துவங்கியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, புதுச்சேரியில் உள்ள கோவில் குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் ஆழப்படுத்தி மழைக்காலத்தில் அதிக அளவு நீர் சேமிக்க வேண்டும்.
அரசு துார்வார வேண்டும் என்றால் நிதி இல்லை; டெண்டர் வைக்க வேண்டும் போன்ற நடைமுறைகளாலும் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில் அனைவருக்கும் அனுமதி அளித்தால் அவர்களே துார் வாரி விடுவர்.
அரசு அதிகாரிகள் கண்காணித்தால் மட்டும் போதும். இதனால் அரசுக்கு செலவும் மிச்சம். நீர்நிலைகளும் ஆழப்படுத்தப்படும். எனவே பொதுப்பணித்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.