/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு பட்டாசு ரூ.32 கோடி விற்பனை
/
தீபாவளிக்கு பட்டாசு ரூ.32 கோடி விற்பனை
ADDED : அக் 20, 2025 11:12 PM
கோவை: கோவையில் ரூ 32 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, பட்டாசு வியாபாரிகள் கூறினர்.
கோவை நகரில், 350, புறநகரில் 450 பட்டாசுகடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. விதிமுறைப்படி பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு தான், விற்பனை சூடுபிடித்தது.
கோவை மாவட்ட பட்டாசு வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:
கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைவு. 800 கடைகள் அமைக்கப்பட்டன. சிறிய கடைகளுக்கு 3 முதல் 5 லட்ச ரூபாய் வரையும், பெரிய கடைகளுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையும், கடந்த 11 நாட்கள் வியாபாரம் நடந்தது. இதன் வாயிலாக 32 கோடி ரூபாய் வர்த்தகம் கிடைத்தது. இது நாங்கள் எதிர்பார்த்த, 85 சதவீத விற்பனை.
இவ்வாறு, கல்யாணசுந்தரம் கூறினார்.

