/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ஓசூரில் ரூ.19.34 லட்சம் மோசடி
/
சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ஓசூரில் ரூ.19.34 லட்சம் மோசடி
சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ஓசூரில் ரூ.19.34 லட்சம் மோசடி
சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ஓசூரில் ரூ.19.34 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 23, 2024 09:23 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஸ்ரீநகரை சேர்ந்தவர் சவுந்தர், 45; தனியார் நிறுவன ஊழியர். இவர், ஆன்லைன் வாயிலாக பகுதி நேர வேலை, முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் சம்பாதித்து வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதமாக இவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, முறையான பதில் இல்லை.
இந்நிலையில், கடந்த, 12ல் சவுந்தரை மொபைல் போனில் தொடர்பு கொண்டவர்கள், 'தாங்கள் சைபர் கிரைம் போலீஸ் என்றும், ஆன்லைனில் தங்களிடம் பணத்தை ஏமாற்றியவர்களை பிடித்து பணத்தை மீட்க, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மேலும் பணம் அனுப்புங்கள்' என, கூறியுள்ளனர்.
நம்பிய சவுந்தர், அந்த வங்கி கணக்குகளுக்கு, 19.34 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
அதன் பின், அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. சவுந்தர் புகாரின்படி படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.