/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோல்கட்டா வாலிபர் 4000 கி.மீ.,ஆன்மிக சைக்கிள் பயணம்
/
கோல்கட்டா வாலிபர் 4000 கி.மீ.,ஆன்மிக சைக்கிள் பயணம்
கோல்கட்டா வாலிபர் 4000 கி.மீ.,ஆன்மிக சைக்கிள் பயணம்
கோல்கட்டா வாலிபர் 4000 கி.மீ.,ஆன்மிக சைக்கிள் பயணம்
ADDED : மார் 26, 2025 01:42 AM

தொண்டி:தேச ஒற்றுமையை வலியுறுத்தி மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த வாலிபர் 4000 கி.மீ., ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு நேற்று வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோல்கட்டா நகர் ஹவுரா பகுதியைச் சேர்ந்தவர் சாய்கெட் 24. அவர் இந்தியா முழுவதும் ஆன்மிக நகரங்களுக்கு சைக்கிளில் பயணம் செல்ல முடிவெடுத்தார். ஒரு மாதத்திற்கு முன் சைக்கிளிலில் தேசியக் கொடியுடன் பயணத்தை துவக்கினார். அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வந்தார். அவரை ஹிந்து ஜனநாயக பேரவை தலைவர் அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
சாய்கெட் கூறுகையில், ''சைக்கிளில் பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். ஆன்மிக நகரங்களுக்கு சென்று தரிசனம் செய்து தேச ஒற்றுமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். தற்போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று கொண்டுள்ளேன் என்றார்.