/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'
/
லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'
லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'
லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'
ADDED : ஜூன் 19, 2025 01:01 AM
துவாக்குடி,:தனியார் நிறுவனத்துக்கு கூடுதல் மின்னழுத்தம் வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மின்வாரிய கூடுதல் தலைமை செயற்பொறியாளருக்கு, 20 ஆண்டுகள் கழித்து, ஈராண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் வைத்தீஸ்வரன் ஆக்ஸிஜன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்துக்கு கூடுதல் மின்னழுத்தம் கேட்டு, அந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் சரவணன் என்பவர், 2005ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
கூடுதல் மின்னழுத்தம் தர, மன்னார்புரம் மின்வாரிய அலுவலக கூடுதல் தலைமை செயற்பொறியாளர் ஆறுமுகம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக, 5,000 ரூபாய் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத சரவணன், போலீசில் புகார் அளித்தார். திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சப்பணத்தை வாங்கும் போது ஆறுமுகத்தை கைது செய்தனர்.
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில், 20 ஆண்டுகளுக்குப் பின், ஆறுமுகத்துக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.