ADDED : ஜூன் 19, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:போலி ஆவணங்களால் எடுத்த பாஸ்போர்ட்டில் மலேஷியா செல்ல முயன்றவர், திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மலேஷியா நாட்டுக்கு செல்லவிருந்த, 'ஏர் ஏசியா' விமானப் பயணியரின், பாஸ்போர்ட்களை திருச்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரம்மாவட்டம், கடலாடியை சேர்ந்த முருகேசன், 51, என்பவர், தன் பிறந்த தேதி, பெற்றோர் பெயரை மாற்றி, போலி ஆவணங்களால் எடுத்த பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய வந்தது தெரிந்தது.
இதையடுத்து, பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாாரிகள், போலீசாரிடம் முருகேசனை ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், முருகேசனை கைது செய்தனர்.