/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
செந்தமிழ்ப்பேரவையின் சார்பில் ஹோலிப் பண்டிகை
/
செந்தமிழ்ப்பேரவையின் சார்பில் ஹோலிப் பண்டிகை
மார் 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுதில்லி, மயூர் விஹார் ஃபேஸ் 3 ல் அமைந்துள்ள செந்தமிழ்ப் பேரவையின் சார்பில் ஹோலிப் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவில் பேரவையின் நிர்வாகிகள், குழந்தைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வண்ணப் பொடிகள், தண்ணீர் துப்பாக்கி மற்றும் தண்ணீர் பலூன்கள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பொருளாளர் க.செல்வக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். விழாவானது தலைவர் அ.மாரி தலைமையிலும் செயலாளர் ச.சரவணன் முன்னிலையிலும் இனிதே நிறைவுற்றது.