
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாசி மகத்தை முன்னிட்டு, நொய்டாவின் செக்டர் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் ருத்ராபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலின் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா வழிகாட்டுதலின் கீழ், பக்தர்கள் குழு, ருத்ரம் பாராயணம் செய்தார்கள். முன்னதாக, வேத மந்திரங்களுடன் கலச பூஜை தொடங்கியது, தொடர்ந்து ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் பல்வேறு ஸ்லோகங்கள் மட்டுமல்லாமல், சிவனை போற்றி பாடல்களைப் பாடுவது காணப்பட்டது. மகா தீபாராதனைக்கு பிறகு, அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது .
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்