ADDED : ஜூன் 27, 2025 11:24 PM

லவ் லெட்டர்' என்றால், அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'அன்புடன் நான் எழுதும் கடிதமே' என்று 'குணா' படத்தின் வசனம் நினைவுக்கு வரும்.
ஆனால், கேரள மாநிலத்தில் 'லவ் லெட்டர்' என்று கூறினாலும், இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன.
அனைவரும் பொதுவாக 'லவ் லெட்டர்' என்றே குறிப்பிடுகின்றனர். இதை காலை நேர உணவாகவும், மாலை நேர தின்பண்டமாகவும் சாப்பிடுகின்றனர்.
செய்முறை
l லவ் லெட்டர் செய்ய முதலில் மாவு தயார் செய்ய வேண்டும். மிக்சி ஜாரில் ஒரு முட்டை, ஒன்றரை கப் மைதா மாவு, ஒரு கப் தண்ணீர், கால் டீஸ்பூன் மஞ்சள் துாள், கால் டீஸ்பூன் உப்பு போட்டு அரைக்கவும்
l மைதாவுக்கு பதில் கோதுமை கூட பயன்படுத்தலாம். மைதா அதிக சுவை கொடுக்கும். லவ் லெட்டர், மஞ்சள் நிறத்திற்கு வருவதற்கு மஞ்சள் துாள் சேர்க்கிறோம்
l மிக்சியில் போட்டு, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். விஸ்க் வைத்து கூட அடித்து மாவு தயாரிக்கலாம்
l வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி உருக்கி, சூட்டை குறைத்து பத்து முந்திரியை பொடியாக நறுக்கி போடவும். அதனுடன் உலர்ந்த திராட்சையை சேர்க்கவும்
l முந்திரி வறுத்து பொன்னிறத்துக்கு மாறியதும், கால் கப் சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய் துாள், ஒன்றரை கப் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்துவிடுங்கள்
l அரைத்து வைத்துள்ள மாவை, தோசை கல்லில் ஊற்றி இரண்டு புறமும் லேசாக வேகவிட்டு எடுங்கள். அதில் ஒரு ஸ்பூன் வறுக்கியதை 'ஸ்டப்பிங்' செய்து, உங்களுக்கு வேண்டிய வடிவில் மடித்து கொள்ளுங்கள்.
அவ்வளவே தான்; உங்களின் அன்பானவர்களுக்கு 'லவ் லெட்டர்' தயார்
- நமது நிருபர் -.