ADDED : ஜூன் 27, 2025 11:22 PM

உருளைக்கிழங்கு என்றால், சிறியவர் முதல், பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு பயன்படுத்தி, பல்வேறு தின்பண்டங்கள் தயாரிக்கின்றனர். இதில் ஆலு குர்குரேவும் செய்யலாம். மொறுமொறுவெனசூப்பர் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
மைதா மாவு- 1 கப்
அவல்- 1 கப் பச்சை மிளகாய்- 2
புதினாஇலை- ஒரு கைப்பிடி
உப்பு- தேவையான அளவு
சீரகதுாள்- 1 ஸ்பூன் மிளகு- 1 ஸ்பூன்
ரஸ்க் துாள்- ஒரு கப்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, குக்கரில் வேக வையுங்கள். வெந்த பின்தோல் உரித்து பாத்திரத்தில் போட்டு, நன்றாக மசித்துக் கொள்ளவும். இதில் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், புதினா, எலுமிச்சம் பழ ரசம், அவல், உப்பு சேர்த்து பிசையவும்.
இந்த கலவையை சிறிதளவு எடுத்து, கைகளால் குச்சிகள் அல்லது பந்து உருட்டிக் கொளவும். அதன்பின் மைதா மாவை பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும்.
ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு பந்துக்குள், மைதா கலவையை சிறிதளவு வைத்து, மீண்டும் உருட்டவும். அதன்பின் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்தும் இந்த உருண்டைகளை ரஸ்க் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான ஆலு குர்குரே தயார். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மாறுபட்ட சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் -.