உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச திருக்கல்யாண உற்சவம்: லாஸ்பேட்டையில் குவிந்த பக்தர்கள்

சீனிவாச திருக்கல்யாண உற்சவம்: லாஸ்பேட்டையில் குவிந்த பக்தர்கள்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் இணைந்து ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வருகிறது. 7ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று ஹெலிபேடு மைதானத்தி ல் நடந்தது.

திருக்கல்யாண வைபவத்திற்காக நேற்று முன்தினம் திருமலையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட உற்சவர் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் துவங்கி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

இந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கைலாஷ்நாதன், செல்வகணபதி எம்.பி., முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நேற்று மாலை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு காப்பு கட்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சிவக்கொழுந்து, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நாராயணசாமி, மோகன்தாஸ், சார்லஸ் மார்ட்டின், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !